கருணாநிதி உடல் நிலை குறித்த செய்தியை கேட்டு திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சேர்ந்த திமுக தொண்டர் கங்கன்(60) தற்கொலை செய்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவள்ளூர் அருகே கார் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். திருவள்ளூர் அருகே ஆவடி அருகே பட்டாமிராமில் பேருந்துக்காக காத்திருந்தவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக வந்த கார் மோதியதில் சுமதி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவள்ளூர் அருகே துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை ஈடுபட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை. செங்குன்றத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசனை பணம் கேட்டு ரவுடி கும்பல் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.இதன் பின்னர் துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவள்ளூர் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 5 ஆம் கட்டமாக 14 கைதிகளை விடுவித்தது தமிழக அரசு. ஏற்கனவே 4 கட்டங்களாக 177 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
திருமணமாகி சில வாரங்களிலேயே, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வேறொரு பெண்ணுடன் கணவர் மாயமாகிவிட்டதால், மனமுடைந்த இளம்பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தங்கராஜ் வேலூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ரங்காபுரத்தில் வசிக்கும் அத்தை மகளான அர்ச்சனாதேவியை, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். அர்ச்சனாதேவியை நிச்சயம் செய்ததில் இருந்து அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்து சென்ற தங்கராஜ், தமது ஊரிலேயே கோமதி என்ற பெண்ணையும் […]
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில், தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில், நாட்டிலேயே, முதன்முறையாக, 6 துறைகளை ஒருங்கிணைத்து, 137 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, நவீன சோதனைச் சாவடியை, விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.. சோதனைச் சாவடியில், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டபோது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் உடனிருந்தன.
இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் பார்க்க வேண்டிய பண்ணை! இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன. அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் […]
பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள் அதிகமாக மின்சார ரயில்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பத்தில் சென்னை-திருப்பதி சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து, மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதே போல் […]
ஹார்டுவேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைப்பதற்கான திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் சுமார் 600 பேர்,தங்களால் இயன்ற ரூ.20 முதல் ரூ.5500 வரை செலுத்தி சேமித்த ரூ.7,50,000வை தங்களது பங்களிப்பாக தமிழக தமிழ் மொழி மற்றும் கலாச்சார அமைச்சர் மா.பா பாண்டியராஜன் அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த பணத்தை நான் பெருமிதம் அடைகிறேன் என அமைச்சர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு பொங்கல் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். 57ஆயிரம் ஏக்கரில் விளைந்துள்ள நெல் மற்றும் சிறுதானிய வகைகள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில்…. திருவள்ளூர் மாவட்டத்தில்… என்று வீட்டுமனைகளாக மாற்றி கூறு போட்டு விற்கப்பட்ட விவசாய நிலங்கள் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மகிழ்சியான விளைச்சலை கொடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கனமழை வெள்ளம்…. 2016ல் புரட்டி போட்ட வர்தா புயல் என கடுமையான பாதிப்புக்குள்ளான திருவள்ளூர் […]
திருவள்ளூரில் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடியை சேர்ந்த குரு விஸவநாதன், அவரது மனைவி லிடியாகிரேஸ், ஓட்டுநர் சரண்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். source: dinasuvadu.com
திருவள்ளூரை அடுத்த மணவூர் காலனியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெங்கடேசன் பெரியகளகாட்டூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபித்துக்கொண்ட வெங்கடேசன், வேலைக்கு செல்வதற்காக […]