செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும்,திட்டம் தொடர்பான கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் முதல்வர் வெளியிட்டார்.அதுமட்டுமல்லாமல்,ஆசிரியர் கையேடு, சான்றிதழ்,கற்றல் கற்பித்தல் உபகரணம்,புத்தகங்கள் ஆகியவற்றையும் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், உணவை ஒவ்வாத நெகிழி மூலம் பரிமாறிய 10 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்துள்ளனர். கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட […]
திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரச அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அவரச அறிவிப்பில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டியிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் விரைவில் உடல்நலம் பெற்று உங்களையெல்லாம் தொகுதியில் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பிய புகாரில் சிறையில் உள்ள பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு […]
சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய சரவெடி சரண் என்ற கானா பாடகரை திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து வெளியிப்பட்ட அறிக்கையில், குழந்தைகளை கடவுளுக்கு சமமானவர்களாக கருதும் நமது நாட்டில் அவர்களது மென்மையான மற்றும் முதிர்ச்சியற்ற மனதினை பயன்படுத்தி அவர்களுக்கெதிராக பாலியல் ரீதியாக வன்முறையைக் கையாளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அந்த குழந்தைகள் மற்றும் அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் தீரா […]
போதைப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் விநியோகம் குறித்து ரகசிய தகவல் தெரிவித்தால் ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாவட்ட எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார். கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 63799 04848 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் […]
திருத்தணி:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ச்ன்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிலையில்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் […]
திருவள்ளூர்:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார் தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று நடைபெறும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். மேலும்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். தமிழகத்தில் சுமார் ஒரு கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.10,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது […]
திருவள்ளூர்:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாளை நடைபெறும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். தமிழகத்தில் சுமார் ஒரு கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.10,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளர் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய உத்தரவு. தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால், அரசு தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடை பணியாளர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, […]
கனமழை காரணமாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சொரக்காய்ப்பேட்டை அரசுப்பள்ளியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கட்டடங்கள் உருகுலைந்த நிலையில், வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று அதிகாலை 3-4 மணி அளவில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடந்தது. இது தற்பொழுது வட தமிழகம் மீது நிலைக்கொண்டுள்ளது இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. விடுமுறை விவரம்: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,திருப்பத்தூர்,நீலகிரி, சேலம்,வேலூர்,ராணிப்பேட்டை,காஞ்சிபுரம்,விழுப்புரம்,தருமபுரி,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி ,காரைக்கால்,புதுச்சேரி ஆகிவற்றிற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு,அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]
சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டு ஆரஞ்சு அலெர்ட்டாக மாறுகிறது என்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து தென்-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவிலிருந்து 18 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும். இது வடக்கு தமிழகம் & அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே நவம்பர் 19 […]
திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றதனால்,சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில், சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,ஏற்கனவே பெய்த மழையால்,வெள்ள நீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும்,மழை தொடர்வதாலும் சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் (நவ.12) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட […]
பூண்டி ஏரியிலிருந்து மதியம் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுவதால் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தில் லட்சுமி மற்றும் வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது அங்கு இருந்த வெடிகுண்டுகளை பார்த்துவிட்டு, வெடிகுண்டு […]
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞனை கத்தியால் குத்திவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த இளம்பெண் கவுதமிக்கு விடுதலை. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தில் 19 வயதான கவுதமி எனும் இளம்பெண்ணுக்கு அவரது உறவினர் அஜித்குமார் என்பவரால் இரவு நேரத்தில் வெளியில் சென்ற போது கத்தி முனையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதால், அஜித்குமாரின் கையிலிருந்த கத்தியை பறித்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கவுதமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு, ரத்தக்கறையுடனும் கையில் கத்தியுடனும் காவல் நிலையத்திற்கு வந்த இளம் பெண்ணை பார்த்து அதிர்ச்சி போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் அருகே உள்ள ஓரக்காடு அல்லிமேடு எனும் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் 19 வயது மகள் தான் கவுதமி. இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுனராக பணியாற்றி வரக்கூடிய அஜித்குமார் ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில், கௌதமி இரவு […]