இயற்கை வேளாண்மை செய்ய ஆர்வமா..?? வாருங்கள் திருவள்ளூர் நோக்கி……

Published by
Dinasuvadu desk
இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் பார்க்க வேண்டிய பண்ணை!

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன.

அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை.

இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் உள்ளன. இயற்கை வளமான மண், பல குட்டைகள், கிணறு, இயற்கை உரம் என இயற்கையோடு இணைந்த பண்ணையாகும்.

இங்கு நடைபெறும் விவசாயத்தில் வேதியியல் ரசாயன உரங்களோ மற்றும் பூச்சி மருந்துகளோ பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு 50 மாடுகள், ஆடுகள், கோழிகள், வாத்து, ஒட்டகம், குதிரை என பல வகை உயிரினங்கள் வளர்க்கப்பட்டு அவற்றின் எச்சங்களை உரமாகப் பயன்படுகிறது. மேலும் இங்கு சூரியசக்தியின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த படுகிறது.

இங்கு விளையும் விவசாய பொருட்கள் மிகக்குறைந்த விலையில் எடை போட்டு விலைக்கு தருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் வளர்க்கின்றனர்.இப்பண்ணையை சுற்றிலும் மரவேலி அமைத்துள்ளனர். இயற்கை உரம் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பண்ணை இப்பண்ணையாகும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயற்கை பண்ணையை பார்வையிட்டுப் பயன்பெறலாம். பழங்கள் வாங்கிச் செல்லலாம்.
முழு விபரம் பெற:–
பாரதி, லியோ இயற்கை வேளாண் பண்ணை,
தேன்சிட்டி குழுமம், காவேரி ராஜபுரம், திருவள்ளூர் மாவட்டம்,
செல்: 99400 17635

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago