திருவள்ளூர் : சென்னையைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கு தற்போது தேங்கி இருக்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், மழை நீர் தேங்கி இருப்பதால் நேரடியாகச் சென்று வேகமாக உணவுகளை வழங்குவது சிரமம் என்பதால் ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை வழங்கும் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், கரையோர மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இன்று நள்ளிரவு அந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் , கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகா […]
காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக, சமீப நாட்களாக சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் திருவள்ளூரில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ளுமாறும்அறிவுறுத்தியுள்ளார்.
கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. மாண்ட்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. இதனால், பல்வேறு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளில் உபரிநீரை திறக்கபட்டு வருகின்றன. பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரை அடுத்து உள்ள சுப்பாரெட்டி பாளையம், பள்ளிபுரம் கிராமத்து மக்கள் மீஞ்சூருக்கு […]
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு […]
மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் எதிரொலியால் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]
திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் இருந்ததால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடையை மூடி நடவடிக்கை. திருவள்ளூர் நெற்குன்றம் பகுதியில் ரேணுகா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் திகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்த நிலையில் கடையை இழுத்து மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கறி வெட்ட உபயோகப்படுத்திய கட்டைகள், கெட்டுப்போன […]
பாலியல் தோலை புகாரில் கைதான பள்ளி தாளாளர் வினோத் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைப்பு. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான பள்ளி தாளாளர் வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவையடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டார் வினோத். கவுன்சிலின் தருவதாக திருநின்றவூர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக தாளாளர் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்பின், பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு தலைமைறைவான தாளாளர் வினோத் கோவாவில் […]
காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வருவதால், திருவள்ளூரில் ஒரு சில இடத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வரும் நிலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூரில் ஒரு சில […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக முழுவதுமாக நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தற்போது அதிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள நீர்நிலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது . அதில், மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக […]
திருவேற்காட்டில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த புகாரின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெரும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ராஜா முத்தெழில். இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளளது. அதாவது, அவர் மாணவிகளிடம் பாடம் நடத்துகையில், மாணவிகளின் கைகளை பிடித்து எழுதச்செய்வது போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுளது. இந்த புகாரை மாணவிகள் பெற்றோரிடம் […]
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு […]
திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியல் […]
திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. கிராம மக்கள் சாலை மறியல். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களுடன் இருந்து உணவருந்திவிட்டு சென்னார் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த […]