ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் புதிய பஸ்நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் ரோசன் ராஜ் தலைமை தாங்கினார்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி போதராஜ், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஜோசப், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பின்னர் திருந்திய ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவை தொகையை 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணப்பயனாக வழங்க வேண்டும்.
மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் மத்திய அரசு அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் அறிவித்தது போல தமிழக அரசு அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…