திருப்பூரில் மதுபான பாரை சூறையாடிய கல்லூரி மாணவர்கள்!

திருப்பூர்- பல்லடம் சாலையில், நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் அருகிலேயே மதுபான பாரும் செயல்பட்டு வருகிறது . இந்த பாரை அகற்றக் கோரி, பொதுமக்களுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
இந்நிலையில், கல்லூரி மாணவர் ரமேஷ்-க்கு, பார் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷின் நண்பர்கள், பாரில் இருந்த நாற்காலிகள், காலி பாட்டில்கள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், பார் ஊழியர்கள் மற்றும் ரமேஷின் நண்பர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இதில் காயமடைந்த ரமேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
source: dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024