திருப்பூர்,திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே 92 லட்சத்து 78 ஆயிரத்து 768 ரூபாய் கடன் இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். தான் கடன் எதுவும் வாங்கவில்லை என அதிகாரிகளிடம் கூறினார்.
இதே போல் திருப்பூர் அருள் புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் சிவபிரகாசம் என்பவரும் இதே வங்கியில் இருந்து ரூ. 6 கோடியே 12 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக வங்கியில் இருந்து தகவல் வந்தது. அவரும் வங்கியில் கடன் எதுவும் வாங்க வில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் ஹாரூண் ரஷித் என்பவர் இதே வங்கியில் ரூ. 5 கோடி கடன் கேட்டு உள்ளார்.அவருக்கு வங்கி நிர்வாகம் கடன் வழங்கி உள்ளது. ஆனால் ரூ. 5 கோடி கடனுக்கு ஹாரூண் ரஷித் ரூ. 8 கோடியே 34 லட்சம் கடன் பெற்றதாக வங்கியில் இருந்து தகவல் வந்துள்ளது.
DINASUVADU
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…