திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திருமூர்த்தி மற்றும் செல்வம் என்ற நண்பர்கள் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்துவந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் நண்பர்கள் என்பதால் பக்கத்து பக்கத்து வீடுகளில் தங்கி இருந்துள்ளன. திருமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி,செல்வத்தின் மனைவி வசந்தாமணி.இந்நிலையில் வசந்த ராஜ் என்ற தரகர் ஒருவர் இருவரின் மனைவிக்கும் வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக அறிமுகமாகியுள்ளார். அவரின் பேச்சை நம்பி இருவரின் மனைவியும் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்காக கடந்த மாதம் சென்றுள்ளனர்.இதன் அடிப்படையில் ஒரு மாதம் ஆகியும் சம்பளம் முறையாக தராமல் […]
திருப்பூரில் உள்ள தெற்கு பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இன்ஸ்பெக்ட்டர் அண்ணாதுரை தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜூலை 3-ம் தேதி இரவு ஒரு பெண்ணும் ஆணும் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.சந்தேகம் அடைந்த காவல் துறையினர்,அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் கணவன்-மனைவி என்றும் அங்குள்ள ஒரு பனியன் கம்பேனியில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.மேலும் காவல் துறையினர் கேட்ட கேள்விக்கு திக்கி தடுமாறியவாறு […]
திருப்பூரை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் கதவை தாழிடாமல் குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தை விழித்தவுடன், தாழிடாமல் இருந்த கதவை லேசாக தள்ள, கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டது. இதனையடுத்து குழந்தை தாய் கதவை பல வழிகளில் திறக்க முயற்சி செய்தாலும் அது இயலாமல் போய்விட்டது. இந்நிலையில், அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குழந்தையை மீட்டெட்டுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள C.S.I.C.C.C மாணவியர் விடுதியில் கணினி அறையில் நபியா என்ற மாணவி மாணவி தூக்கிட்டு கொண்டதாகவும் , அவர் மருத்துவமனை சென்று வழியில் அவர் இறந்து விட்டதாகவும் பள்ளி நிர்வாகம் கூறுகின்றது. ஆனால் இதை நம்ப மறுத்த நபியா பெற்றோர்களும் உறவினர்களும் தாராபுரம் மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனை சென்ற போது அங்கே பெற்றோர்களின் ஒப்புதல் இன்றி நபியா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.எனவே நபியா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் […]
அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பனிப்பொழிவு மற்றும் போதிய மழையின்மை காரணமாக அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. 90 அடி கொண்ட இந்த அணையின் தற்போதைய நீர் […]
வழிபோக்கு ஜோதிடத்தை நம்பி, கிளி ஜோசியரை கொலை செய்ததாக அக்கவுண்டன்ட் ரகு வாக்கு மூலம் அளித்துள்ளார். திருப்பூர், குமரன் சாலையில் உள்ள புங்கா அருகே டிசம்பர் 24ம் தேதி கிளி ஜோதிடர் ரமேஷ் ஹெல்மெட் அணிந்த நபரால் கொடுராமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. திருப்பூர் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளியை தேடி வந்த நிலையில், டிசம்பர் 26ம் தேதி சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் […]
திருப்பூரில் ரமேஷ் என்ற ஜோசியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி சரணடைந்துள்ளார். திருப்பூரில் ரமேஷ் என்ற ஜோசியர் உள்ளார்.இவர் இன்று திருப்பூரில் உள்ள குமரன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அவர் பின்னாடி ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் அவரை அரிவாளால் சராமாரியாக தாக்கப்பட்டார்.பட்டப்பகலில் மக்களின் கண்முன்னே ஹெல்மெட் அணிந்த நபர் ரமேஷ் என்ற ஜோசியரை கொன்றுவிட்டு நடந்து சென்றுவிட்டார்.இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த […]
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் திருவருட்செல்வன். இம்மாணவன் செயற்கை மழையை பெய்விக்க உதவும் ஆளில்லா விமானத்தை கண்டுபிடித்து சாதணை படைத்து உள்ளார். 400 அடி உயரம் வரை பறக்கும் வகையில் இந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சிறிய பரப்பளவில் போதுமான மழையை பெய்விக்க முடியும். திருவருட்செல்வனின் இந்த திட்டம், பல மாவட்ட அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை பெற்றுள்ளது. முத்தாய்ப்பாக மாணவனின் இத்திட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் வரும் […]
வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு திருப்பூரில் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.வரும் செவ்வாய்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இந்நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இந்த விழாவையொட்டி திருப்பூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் ஸ்ரீவாரி அமைப்பு சார்பில் ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த லட்டுகள் அனைத்தும் திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் […]
திருப்பூரில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக அரசின் 47ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தீபா பேரவையில் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை இணைத்துக் […]
அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் அமைந்துள்ளது அமராவதி அணை தொடர்ந்து மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை தனது முழு கொள்ளளவை எட்டவுள்ளது.இந்த நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். DINASUVADU
கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், திருப்பூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில் மேலும் கஜா புயல் காரணமாக விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை […]
நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் அருகே போயம்பாளையத்தில் வசிக்கும் ஒரு தம்பதி புதனன்று இரவு வேலை பார்க்கும் இடத்தில் ஓவர்டைம் வேலை பார்க்க சென்றுள்ளனர்.இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அவர்களது 4 மற்றும் 6 வயது பெண் குழந்தைகள் இருவரும் வீட்டில் தனிந்தனியாக இருந்துள்ளனர். வேலையை முடித்து வியாழனன்று காலை பெற்றோர் வீடு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது தங்களின் 4 வயது […]
துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் மாநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டது மேலும் அதற்கான பணிகளை தொடங்கிய நிலையில் மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகரில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்கின்ற தொழிலாளிகள் கையுறை சுவாசப் பாதுகாப்பு முகமூடி பாதுகாப்பு காலணி போன்ற அடிப்படை வசதி […]
நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட அவிநாசி டி.எஸ்.பி ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டார். திருப்பூரில், நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தரக்குறைவாக நடந்து கொண்ட அவிநாசி டி.எஸ்.பி. ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். தண்டிக்கப்பட்ட அவிநாசி டி.எஸ்.பி.யான பரமசாமி, கடந்த 10-ஆம் தேதி ஒரு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அரசு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு உரிய தகுந்த பதில் அளிக்காததோடு மட்டுமல்லாமல் நீதிபதியிடமே […]
தாராபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் பசுமாடு பலியானது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ளது வினோபா நகர். இங்கு 200க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உயர்அழுத்த மின் கம்பம் ஒன்று கடந்த 15 நாட்களுக்கு முன் பெய்த மழையால் சாய்ந்தது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கம்பத்தை உடனே மாற்ற போதிய ஆள்வசதி இல்லை என கூறி மின் […]
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் தலித் மக்களின் வழித்தடப் பாதையை மறித்து ஆளும்கட்சி பிரமுகர் கம்பி வேலி அமைத்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி அலகுமலை கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து திடீரென கம்பி வேலி அமைத்தனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் […]
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அள்ளுவதை கைவிடக்கோரி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியாக கடந்த 2010 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்குட்பட்ட பகுதியில் குப்பை அள்ளுவதற்கும், தூய்மைப்பணி செய்வதற்கு எஸ்.டபுள்யு.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்திற்கு மாத வருமானமாக ரூ.1 கோடி மக்கள் வரி பணத்தை வழங்குகிறார்கள். இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த […]
திருப்பூர், தமிழக சட்டபேரவை உறுதிமொழி ஆய்வுக்குழுவினர் திருப்பூரில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வியாழனன்று ஆய்வு செய்தனர். தமிழக சட்டபேரவை உறுதிமொழி ஆய்வுக்குழுவின் தலைவர் ஐ.எஸ். இன்பத்துரை தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின் உறுதிமொழி ஆய்வுக்குழுவினர் வியாழனன்று மாவட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான மேம்பாலங்கள், சிக்கண்ணா கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் […]
திருப்பூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த தினமான கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை தாராபுரம் நகரின் மையப்பகுதியில் தீவுத் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் தலை மீது செருப்பு வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டிருந்தது. அந்த வெண்கலச் சிலையை சேதப்படுத்தவும் விஷமிகள் முயன்றிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தாராபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரை காவல் […]