சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்,பாஜகவில் இணைந்துள்ளார்.திருப்பூரில் இன்று நடைபெற்று வரும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில்,மாணிக்கம் அவர்கள் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவிப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பேசி வரும் நிலையில்,தமிழக முன்னாள் முதல்வர் […]
திருப்பூர் மாவட்டத்தில் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடக்கி வைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார். சுமார் 56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 […]
திருப்பூரில் சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு. திருப்பூர் வீரபாண்டி அருகே சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தினேஷ், வடிவேல் என்ற 2 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூருக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக திருப்பூர் மாவட்டத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வந்த பின்பே வெளிமாநில தொழிலாளர்கள் […]
திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் குறைக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.இதனை மாவட்ட ஆட்சியர் நேற்று இரவே செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.அதன்படி, பால் ,மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மளிகைக்கடைகள்,காய்கறிக் கடைகள்,பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட மட்டுமே அனுமதி. திருப்பூர் மாநகரத்தில் அமைந்துள்ள கீழ்கண்ட 33 வணிக பகுதிகள் மற்றும் […]
இரவு நேரத்தில் தாமதமாக தந்தை தனது கடையிலிருந்து கொண்டு வந்த ப்ரைடு ரைஸை சாப்பிட்டு விட்டு தூங்கிய இரு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. நேபாளை சேர்ந்த சந்தோஷ் ஆர்த்தி ஆகிய தம்பதிகள் திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தலில் தங்களது 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். சந்தோஷ் திருப்பூரில் தனியார் பாஸ்ட் புட் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து வரும் பொழுது ஹோட்டலில் உள்ள உணவுகளை தனது குழந்தைகளுக்கு […]
திருப்பூரில் தனது பிறந்தநாளுக்கு வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டுவது வழக்கமாகிவிட்டதுடன், இது வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என போலீசார் எச்சரிக்கை செய்வதும், தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டும் வருகிறது. மேலும், தொடர்ந்து அவ்வாறு செய்யக் கூடியவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தினை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு கடந்த […]
திருப்பூரில் முககவசம் அணியாத தம்பதியிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது வெளியில் செல்லக் கூடிய நபர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் எனவும் மீறுபவர்கள் அபராதம் கட்ட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலரான நடராஜன் மற்றும் ஆயுதப் படைப் பிரிவை சேர்ந்த காசிராஜனும் பெருமாநல்லூரில் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு […]
கொரோனா மரணங்களை விட அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று மின்தடை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயன், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் 40 நிமிடம் அளவிற்கு மின் […]
மனைவி மற்றும் மகள் இருவரும் டிக்டாக் மூலம் பழக்கமானவர்களுடன் இறங்கி போனதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளது. சமீபத்தில் அந்த செயலியை முடக்கியதை அடுத்து பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். மேலும் இந்த டிக்டாக் செயலியால் பல குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அந்த வகையில் டிக்டாக்கால் ஒர்ஷாப் உரிமையாளர் ஒருவர் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கூறிவிட்டு தூக்கில் தொங்கிய […]
80 அடி உயரமுள்ள மொபைல் டவர் இடிந்து விழுந்ததால் 53 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பூரில் வீரபாண்டி அருகிலுள்ள 80அடி உயரமுள்ள மொபைல் டவர் ஒன்று அதிவேகமாக அடித்த காற்றை தாங்க இயலாமல் இடிந்து விழுந்தது. அந்த மொபைல் டவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 53 வயதான செங்கிஸ்கான் மீதும், ஒரு லாரி மீதும் விழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று காலை 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த […]
திருப்பூரில் ராம்குமார் பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது மனைவி சுகாசினி மற்றும் மகனுடன் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். டிரைவராக பணியாற்றி வரும் ராம் குமார், தனது மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டில் விட்டு வந்துள்ளார். ராம்குமாரின் மனைவி சுகாசினி அருகிலுள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் ராம்குமார் […]
தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் எச்சரிக்கும் கருவி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே வரும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்து செல்வோர், தனிமனித […]
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1-க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக முககவச தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை திருப்பூர் […]
பொதுமக்கள் கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால், தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டு கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதன் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைக்கு வெளியில் செல்லும் போது தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசங்கள் அணிவதை பின்பற்றவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் இடம்பெற்ற சமூக விலகல் குறித்த வசனத்தை பதிவிட்டுள்ளார். இந்த வசனத்தை பதிவிட்டு, சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அது என்ன […]
திருப்பூர் மாவட்ட ஆட்சியரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டி உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.ஆனால் மக்கள் தங்கள் அத்தியவாசிய தேவைக்காக வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கூடிகின்றன. எனவே மக்களின் பாதுகாப்பு அவசியத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் இது குறித்து தொழில் துறையினர் ஆலோசனையுடன், தன்னார்வலர்கள் பங்களிப்போடு கிருமி நாசனி தெளிக்கும் நடைபாதை தற்போது உருவாக்கப்பட்டு […]
சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,திருப்பூரில் காலையில், சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்க பாதைக்குள் சென்ற பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில், ‘காலையில், சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்க […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமாகாமல், அதனை கட்டுப்படுத்துவதற்காக, நமது நாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதானால், மக்கள் கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு சில கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா வாயிரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போனில் ஆர்டர் […]
திருப்பூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதுடைய சென்னியப்பன் மற்றும் 65 வயதுடைய இவரது மனைவி கருணையம்மாள், இவர்களுக்கு பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் மனு அளித்தனர். அதில், எனது மகன் பழனிச்சாமி, எங்களது சொத்துக்களை ஏமாற்றி, பிடுங்கிக் கொண்டு கடந்த10 ஆண்டுகால எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்திவருகிறான். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் […]