“குப்பை அள்ளளும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்காதே” தொழிலாளிகள் கோரிக்கை..!!
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அள்ளுவதை கைவிடக்கோரி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியாக கடந்த 2010 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்குட்பட்ட பகுதியில் குப்பை அள்ளுவதற்கும், தூய்மைப்பணி செய்வதற்கு எஸ்.டபுள்யு.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்திற்கு மாத வருமானமாக ரூ.1 கோடி மக்கள் வரி பணத்தை வழங்குகிறார்கள். இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிந்து விட்ட நிலையில், தற்போது மீண்டும் புதுப்பித்து மாதம் ரூ.2 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளுடன் செயல்பட்டு வந்தது. பின் வார்டு மறு சீரமைப்பின் படி கூடுதலாக 12 வார்டுகள் சேர்த்து 72 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக செயல்படுகிறது. இந்நிலையில் ஒரு வார்டுக்கு 20 ஆண் பணியாளர்கள், 20 பெண் பணியாளர் மற்றும் 10 மலேரியா தடுப்பு பணியாளர்கள் என 72 வார்டுகளுக்கு 3,600 பணியாளர்களை நியமிக்க வேண்டும். எனவே கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU