தாராபுரம் பெரியார் சிலையை அவமதித்தவர் RSS பின்னணி உடையவர் போலீஸ் விசாரணையில் அம்பலம்..!!

Published by
Dinasuvadu desk

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த தினமான கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை தாராபுரம் நகரின் மையப்பகுதியில் தீவுத் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் தலை மீது செருப்பு வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டிருந்தது. அந்த வெண்கலச் சிலையை சேதப்படுத்தவும் விஷமிகள் முயன்றிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தாராபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் தாராபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சாதிய அமைப்பு மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்றும், உள்நோக்கம் ஏதுமின்றி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இவர் பெரியார் சிலையை தன்னிச்சையாக அவமதித்தார் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, நவீன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என்ற நிலையில் நவீன்குமார் தன்னையறியாமல் குற்றத்தில் ஈடுபட்டார் என வாதிட்டு பிணையில் விடும்படி கோரினர். எனினும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் பிணை வழங்கப்படவில்லை. அதேசமயம் அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனுச் செய்ததை ஏற்று 26ஆம் தேதி மாலை 5 மணி வரை காவல் துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Related image

இந்த நிலையில், மேற்படி நவீன்குமார் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற விபரம் அவரது சமூக வலைதளப் பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது. கடந்த 2017 அக்டோபர் 8ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் முகாமில் அவர்களது சீருடையான வெள்ளை சட்டை, காக்கி கால்சட்டையுடன் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியிலும் பங்கேற்றிருக்கிறார் என அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். தாராபுரம் காவல் துறையினர் விசாரணையில் மேற்படி விபரங்கள் தெரியவந்துள்ளன.

DINASUVADU 

Recent Posts

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

56 mins ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

2 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

3 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

3 hours ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

4 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

4 hours ago