1 லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்…!!
வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு திருப்பூரில் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.வரும் செவ்வாய்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இந்நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இந்த விழாவையொட்டி திருப்பூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் ஸ்ரீவாரி அமைப்பு சார்பில் ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த லட்டுகள் அனைத்தும் திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளன.