செயற்கை மழையை பெய்விப்பதற்காக ஆளில்லா குட்டி விமானம் உடுமலை பள்ளி மாணவர் சாதனை…!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் திருவருட்செல்வன். இம்மாணவன் செயற்கை மழையை பெய்விக்க உதவும் ஆளில்லா விமானத்தை கண்டுபிடித்து சாதணை படைத்து உள்ளார். 400 அடி உயரம் வரை பறக்கும் வகையில் இந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளார்.
இதன் மூலம் சிறிய பரப்பளவில் போதுமான மழையை பெய்விக்க முடியும். திருவருட்செல்வனின் இந்த திட்டம், பல மாவட்ட அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை பெற்றுள்ளது. முத்தாய்ப்பாக மாணவனின் இத்திட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் வரும் 27ம் தேதி ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய அறிவியல் மாநாட்டில், பங்கேற்க அவருக்கு அழைப்பு வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது