திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் தலித் மக்களின் வழித்தடப் பாதையை மறித்து ஆளும்கட்சி பிரமுகர் கம்பி வேலி அமைத்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி அலகுமலை கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து திடீரென கம்பி வேலி அமைத்தனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், செயலாளர் ச.நந்தகோபால், துணைச் செயலாளர் ஜி. சம்பத், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, ஆதித் தமிழர் ஜனநாயகப் பேரவை தலைவர் அ.சு.பவுத்தன் ஆகியோர் வியாழனன்று நேரில் சென்று அதைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினர்.
பின்னர், அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதில் ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட கான்கிரீட் சாலையை உடைத்து சேதப்படுத்தி, வழித் தடத்தை மறித்து போடப்பட்ட தீண்டாமை வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். மக்களின் பல்லாண்டு காலப் பயன்பாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது. தனிநபர்கள், அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி, தலித் மக்கள் மீது தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்துவதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு கண்டிப்பதோடு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…