தீவிரவாதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு போல சாதிய வன்முறையை தடுக்க தனிப்பிரிவு.! திருமாவளவன் பேட்டி.!

VCK Leader Thirumavalavan

சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தையே பரபரப்பாகிய சாதிய வன்முறை சம்பவம் தான் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை சக மாணவர் கும்பல் வெட்டிய சம்பவம். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தாக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் மாணவரின் தங்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாணவர்கள் மத்தியில் சாதி, மத அரசியல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. ஒரு சில அமைப்புகள் இதனை தொடர்ந்து செய்து வருகின்றன. அவர்களால் இளம் தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படும் இந்த போக்கு வேதனை அளிக்கிறது என திருவமாவளவன் குறிப்பிட்டார்.

நாங்குநேரி சம்பவத்தை குறித்து ஆய்வு செய்வதற்கு நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். இந்த விசாரணை ஆணையம் மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு சிறந்த வழிகாட்டுதல் வெளியாகும் என நம்புகிறேன். மாணவரின் குடும்பத்தை முதல்வர் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல வீடு வழங்க வேண்டும். பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை முதல்வரிடம் நான் எடுத்துரைப்பேன் எனக்கு குறிப்பிட்டார்.

சாதி பெருமையை பேசுவது பிற சமூகத்தின் மீது வெறுப்புக்கு இடம் கொடுக்கிறது. குழந்தைகளிடம் நச்சு கருத்துக்களை விதைக்காதீர்கள் அவர்களை சுதந்திரமாக விட்டு விடுங்கள் எனவும் குறிப்பிட்டார்.

குழந்தைகளிடம் சாதி பெருமையை பேசுவது, தலித், பழங்குடியினர், சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை உண்டாக்கும். அதற்கு இந்த சமூகமே பொறுப்பு. தீவிரவாதம் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் உளவுப்பிரிவு போல சாதி மதவாத சக்திகளை கண்காணிக்க தனியாக உளவுத்துறை தேவைப்படுகிறது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு கூடுதல் கவனம் செலுத்தி சாதியா வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து வரும் 18ஆம் தேதி சென்னையிலும், 20ஆம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்