மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் திமுகவினர் சாலை மறியல்…!!
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாளை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.