திருநெல்வேலி

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர்…..!!! 2பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு….!!!

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  நெல்லையில் டவுன் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் மேசையை தட்டி விட்டதாக கூறியுள்ளார். அப்போது வகுப்பில் உள்ள ஆசிரியர் ஜோசப் செல்வின் அந்த மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது. தன்னுடன் பயிலும் சகா மாணவர்கள் முன்பு அடித்ததால் மனமுடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் […]

tamilnews 2 Min Read
Default Image

சோதனை சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கண்டிப்பாக ஆவணக்கள் வைத்திருக்க வேண்டும் …!நெல்லை ஆட்சியர் உத்தரவு

சோதனை சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கண்டிப்பாக உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறைகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து நெல்லை புளியகரை வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் பொருட்களை கடும் கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட  உத்தரவில்,சோதனை சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கண்டிப்பாக உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறைகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.  மருத்துவ கழிவுகளை எக்காரணத்தை […]

india 2 Min Read
Default Image

சாதி, மதம் மறந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள்….!!!

நெல்லையில் அரசு சித்த மருத்துவ கல்லூரியில்மாணவ மாணவிகள், சாதி, மதம் மறந்து சமத்துவ பொங்கல் கொண்டாடியுள்ளனர். நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில், மாணவ மாணவிகள் சாதி மதம் போன்ற வேறுபாடுகளை கடந்து சமத்துவ பொங்கல் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணைந்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தி பொங்கல் வைத்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

tamilnews 1 Min Read
Default Image

நெல்லையில் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தி ஓவியப் போட்டி

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர். நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஐந்து வகையான தலைப்புகளில் 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஓவியப்போட்டியில் பங்கேற்றனர். பாதுகாப்பான உணவு, சத்தான மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு, உணவை வீணாக்காதீர்கள் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் தங்கள் கற்பனைத் திறனை கொண்டு ஓவியங்களை வரைந்தனர். வெற்றி […]

competition 2 Min Read
Default Image

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் மற்றும் ட்ரைவர் கைது…!!!

திருநெல்வேலி அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி அருகே கணக்குபிள்ளைவலசையில் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றும் இளையராஜா என்பவரும், பஸ் டிரைவர் பரமசிவன் என்பவரும் 4 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் […]

tamilnews 2 Min Read
Default Image

பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டதையடுத்து நெல்லையில் அதிரடி சோதனை…..!!!

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து நெல்லையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நெல்லை மாநகராட்சி ஆணையர் நாராயண நாயர் உத்தரவின்படி 10 மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், சில கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை […]

tamilnews 2 Min Read
Default Image

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு….!!! சுற்றுலா பயணிகள் குளிக்க தடை….!!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, மணிமுத்தாறு அருவியில் குளிக்க தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 6-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் எய்யும் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

TAMIL NEWS 2 Min Read
Default Image

நெல்லையில் கனமழை….!!! பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில், போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

tamilnews 2 Min Read
Default Image

நெல்லையில் நான்கு வழிச்சாலை….மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை…!!

நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம். திருநெல்வேலி மாவட்டத்தில் திருமங்கலத்தில் இருந்து, கொள்ளம் வரை நான்கு வழிச்சாலை அமையவுள்ளது.இந்த திட்டத்திற்க்காக மக்களிடமிருந்து  விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், சிவகிரி, புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சுமார் 2000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு […]

#Politics 3 Min Read
Default Image

நெல்லையில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தராவிட்டுள்ளார். தமிழக அரசின் உத்தரவையடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, வருகிற 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 1ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தினால் சிறு வியாபாரிகருக்களுக்கு, ரூ.500 முதல் ரூ.5,000 அபராதமும், பெரிய வியாபாரிகளுக்கு ரூ.5,000 […]

tamilnews 2 Min Read
Default Image

நெல்லையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வு….!!!!

நெல்லையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 3,423 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தமிழக போலீஸ் துறையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்க்கான தேர்வு நெல்லையில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு போலிஸாராக பணிபுரிவோர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

tamilnews 1 Min Read
Default Image

நெல்லையில் பரவலாக மழை….!!! குற்றால அருவிகளில் குளிக்க தடை….!!!

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மலை பெய்து வருவதால் குற்ரால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பல அணைகள் நிரம்பியுள்ளது. விவசாய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில்,  குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

tamilnews 2 Min Read
Default Image

நெல்லை பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை…!!

நெல்லை பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

tamilnews 2 Min Read
Default Image

புதிய கட்சியை தொடங்கிய நடிகர் கார்த்திக்…..!!!!

நடிகர் கார்த்திக் தான் இது வரை நடத்தி வந்த கட்சியின் பெயரை மாற்றியுள்ளார். நடிகர் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திடீரென்று ” மனித உரிமை காக்கும் கட்சி ” என்ற கட்சியை தொடங்கி உள்ளார். நடிகர் கார்த்திக் இந்த கட்சி அறிமுக நிகழ்ச்சியை நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தினார்.

TAMIL NEWS 1 Min Read
Default Image

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்….!!

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மீனவர்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மாதம் தோறும் நடைபெறுவது வழக்கமான நடைமுறையாகும். அதன்படி ராதாபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடத்தின் கூட்ட அரங்கில் மீனவர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூண்டில் வளைவு அமைத்து, கடல் […]

news 2 Min Read
Default Image

நெல்லையில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நெல்லையில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் 2 வாரத்திற்கு இயங்குவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு பரவும் கோமாரி நோய்யை தடுக்கவே தடை விதித்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

tamilnews 1 Min Read
Default Image

நெல்லையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு….!!!

நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே  வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, தனியார் விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உடன் வந்த பெண்கள் ஹாப்பியோடியுள்ளனர். இதனையடுத்து இது கொலையா ? தற்கொலையா ? என விக்கிரமசிங்கபுர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamilnews 1 Min Read
Default Image

கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் வாகனம்…!!! மாவட்ட ஆட்சியர் ஷில்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்…!!!

திருநெல்வேலியில் கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் நவீன வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா துவக்கி வைத்தார். திருநெல்வேலியில் சிறையில் உள்ள கைதிகளுக்கு காச நோய் கண்டறியும் நவீன வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். பாளையங்கோட்டை மத்திய சிறை மற்றும் கிளை சிறை கைதிகளுக்கு காசநோய் மற்றும் எய்ட்ஸ் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்காக நவீன வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இருமல், சளி உள்ளவர்கள் பரிசோதனை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

tamilnews 2 Min Read
Default Image

காதலித்த பெண்ணை குத்திக் கொலை செய்த இளைஞர்….!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலித்து ஏமாற்றிய பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் மெர்சி என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற இளைஞரும் பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவீந்திரன் வேலையில் இருந்து நின்றுவிட்டதால், மெர்சி வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன், மெர்சியை வள்ளியூர் பேருந்து நிலையத்தின் அருகில் வரவழைத்து கத்தியால் […]

#Murder 2 Min Read
Default Image

டிச.23ம் தேதி இயக்கப்படவிருந்த சுவிதா சிறப்பு ரயில் ரத்து….!!!

நெல்லை-சென்னை இடையே டிச.23-ம் தேதி இயக்கப்படவிருந்த சுவிதா சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவிதா சிறப்பு ரயில் டிசம்பர் 23-ம் தேதி நெல்லை – சென்னை இயக்கப்படவிருந்தது. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிச.23-ம் தேதிக்கு பதிலாக டிச.25ம் தேதி இந்த சுவிதா ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த ரயில் டிச-25ம் தேதி நெல்லையிலிருந்து மாலை 6.15 மணிக்கு சுவிதா ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnews 2 Min Read
Default Image