தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் முடியும் என்ற பெருமை கொண்ட ஆறு தாமிரபரணி ஆறு. இந்த தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்பாட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தாமிரபரணி எனும் சொல் வடமொழி சொல் எனவும், பொருநை நதி என்ற பெயர் தான் சங்ககால இலக்கியத்தில் உள்ளது. ஆதலால் […]
நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்ஐ பார்த்திபன் மீது சங்கர், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு நெல்லை மாவட்ட பழவூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் அம்பலவாணபுரம் பகுதியில் ரோந்து பணியில். அப்போது அந்த பகுதியாக சங்கர் மணிகண்டன் ஆகியோர் டெம்போவில் மணல் கடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. அந்த டெம்போவை சோதனையிட்டு , அனுமதி சீட்டை எஸ்ஐ பார்த்திபன் சரிபார்த்துள்ளார். அப்போது, சங்கர் மணிகண்டன் ஆகிய இருவரும் […]
ஒரு இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை, புகார் கூற அலுவலகம் வரக்கூடாது, போதிய சம்பளம் இல்லை என பல்வேறு புகார்கள் கூறி நெல்லை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான தூய்மை பணி தொழிலாளர்கள் மணக்காட்சி அலுவலகத்தில் குவிந்தனர். மேலும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தையும் அறிவித்து தங்களது எதிர்ப்புகளை கூற ஆரம்பித்து விட்டனர். அதாவது, நெல்லை மாநகர் தூய்மை தொழிலாளர்களுக்கு தற்போது புதிய வருகை பதிவேடு முறை வந்துள்ளாதாம். […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது என நயினார் நாகேந்திரன் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லையில், ரூ.330 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் முத்தமிழ் அறிஞரின் புதல்வர்.. தமிழ்நாட்டு முதல்வர்.. […]
நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை […]
அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி. நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற கனிம பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை என்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக ரூ.300 கோடி அபராதம் விதித்த உத்தரவை மறுபரிசீலினை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிகளை மீறி […]
நெல்லைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கட்டுப்பாட்டி அறை எண் அறிவிப்பு. அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. நெல்லைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கட்டுப்பாட்டி அறை எண்ணை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி,மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டால் 1070 மற்றும் 0462-501012 எண்ணில் […]