நெல்லை : ஏர்வாடியில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு அடைந்துள்ளனர். பள்ளியின் ஆண்டு விழாவில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒளி கொண்ட மின்விளக்குகளால் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி ஆண்டு விழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு. கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட […]
நெல்லை : கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் 5 வது நாளாக 8000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை:கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது. ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் வள்ளியூர் வழக்கறிஞர் சேவியர் என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிரியா நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டி பணகுடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையான புனித சூசையப்பர் திருத்தல பங்கைச் சேர்ந்த இறைமக்கள் சுமார் 500 பேர் தவக்கால புனித யாத்திரை சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே உள்ள ஒரு குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தவர் அக்குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மீனவரின் உடல் இன்று மீட்கப்பட்டது .பின்னர் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 110 நாட்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவானந்த், காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெல்லை : பணகுடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் 10 வருடமாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் வருகிறது. புதிய கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை : பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 8000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தென்குழி என்னும் கடற்கரை கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் போது வரும் கடல் மண் அரிப்பை தடுக்கும் எண்ணத்தில் தமிழக அரசால் சுமார் 8 கோடி மதிப்பிட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாடார்மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராக்கெட் ராஜா உள்ளிட்ட 9 பேரை நெல்லையில் கொடியன் குளம் குமாரின் மருமகன் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம் கொடியன்குளத்தை சேர்ந்தவர் குமார். அதிமுக பிரமுகரான இவர் பாளையங்கோட்டை அடுத்த அண்ணா நகரில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது மருமகன் செந்தில் குமாரிடம் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று குமார் மீது வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்றது. கொடியன் குளம் குமார் […]
திருநெல்வேலியில் கொடியன்குளம் குமார் என்ற அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கொடியன்குளம் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர் செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குமாரின் அலுவலகத்தின் மீது திடீரென நாட்டு வெடிகுண்டை […]
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் மாசி திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் நேற்று நடந்த வானவேடிக்கையிலிருந்து வந்த தீப்பொறி ஒன்று கோயில் வளாகத்தில் பைரவர் சன்னதியின் பின்புறம் உள்ள மரம் ஒன்றில் விழுந்தது. உடனே அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை கேட்டு தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,தீயணைப்பு படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர்.பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் […]
திருநெல்வேலியில் வள்ளியப்பன் ஸ்டோர் என்கிற கடை உரிமையாளர் எலி தொல்லையை ஒழிக்க பல வழிகளிலும் போராடியும் ஒன்றுமே பலிக்கவில்லை . அதன் பிறகு இது போல மரியாதையுடன் வேண்டுகோளை ஒரு கடிதத்தில் எழுதி வைத்தபின்னர் எலி தொல்லை வெகுவாக குறைந்து விட்டது என்கிறார் அவர். அது ஒரு வேளை தமிழ் எழுத ,படிக்க தெரிந்த எலியா இருக்கும் போல….. நமக்குத்தான் தெரியலையோ…??
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்காவிட்டால் வரி செலுத்த மாட்டோம், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அந்த தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 1967 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தனித் தொகுதியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை: நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி ஆய்வு பணிகளை மேற்கொண்டு +2 மாணவ மாணவிகளுக்கு தோட்டக்கலை குறித்து பாடம் எடுத்து அசத்தினார். இதனால் அங்குள்ள மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் தோட்டக்கலை குறித்து பயின்றனர்.
நெல்லை :தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வண்ணார் பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:பழவூர் அருகே சங்கனாபுரத்தில் 5மாதங்களுக்கு முன்பு உடைந்து விழுந்த தரைப்பாலத்தால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள். எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடரும் விபத்துக்கள்… இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் சிறப்பு விற்பனையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். பொதுமக்களும் இப்பொருள்களை ஆர்வமுடன் வந்து வாங்கி செல்கின்றனர்..இதுபோன்ற புதுமையான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இவ்வாறு தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் வாய்ப்பு கிடைத்தால் பேசுவேன் என்றும் அவர் கூறினார். கவர்னர் உரையில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்துவிட்டு அதன்படி தான் பேசுவேன் எனக் குறிப்பிட்ட தினகரன், திராவிட ஆட்சியில் ஆன்மீக அரசியல் சாத்தியப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு உலகில் எங்குமே அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்று தெரிவித்தார். ஆன்மீகம் என்பது மதம் சம்பந்தப்பட்டது என்று கூறிய தினகரன், எனவே […]
தென்காசி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 69 பேருந்துக் களில் 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப் படும் 38 பேருந்துக்களில் 13பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.