அமைச்சர் செங்கோட்டையன் ,தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இனி எந்த தேர்வினை கொண்டு வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்களை தயார் படுத்தி வருவதாக கூறினார். இதனிடையே, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மே மாதம் இறுதிக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு […]
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சித்திரை விசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பாபநாசத்தில் பாபநாசர் உடனுறை உலகாம்பிகை கோவில் சித்திரைவிசு திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதேபோன்று ஆழ்வார்குறிச்சியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படும் சிவசைலநாதர் திருக்கோவில் சித்திரைவிசு தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க விமரிசையாக நடைபெற்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இங்கிலாந்து கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன் (70) என்பவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவருக்கு ,வள்ளியூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து `கிரேல் டிரஸ்ட்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதான் ராபின்சன் நடத்தி வந்தார். இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை சென்னை, புதுடெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் […]
நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்.எல்.சி.யை முற்றுகையிட திட்டமிட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி மீட்புக் குழு மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்எல்சி முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்காக நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்படும் பேரணியில் பழ.நெடுமாறன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் […]
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு விழா நடத்தும் மரபு குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோயில் இணை ஆணையர் திணறினார். வரும் 27-ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கு நேரம் குறிக்கப்பட்டது. பணிகள் நிறைவடையாதது மற்றும் ஆகம விதிகள் மீறல் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விளக்கமளிக்க நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கோயில் செயல் அலுவலர் ரோஷினி […]
நெல்லையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 5 – ந்தேதி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வம் , இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு முன் கடந்த 5 – ஆம் தேதி காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து இளைஞர் செல்வம குதித்தார் .நெல்லை – நாகர்கோவில் சென்ற பேருந்தில் பயணம் செய்த கோவைக்குளம் கிராமத்தைச் […]
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம் போராட்டக்களமாகவே மாறியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு […]
காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்தார் . இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது. […]
நெல்லையில் குருந்துடையார்புரத்தில் ரயில்வே பாலம் அருகே பயணிகள் ரயிலை மறித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது. […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் கைது செய்யபட்டனர். இதற்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுகவினர் மற்றும் எதிர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சற்று முன் வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட […]
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கடந்த மார்ச் 19 ஆம் தேதி விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவை நெல்லை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ரத யாத்திரைக்காக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலை 6மணி முதல் தளர்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது. ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை மாவட்டம் செங்கோட் டையில் ராமராஜ்ய ரத யாத்திரை என்கிற பெயரில் வகுப்புவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு எதிர்ப்புதெரிவித்து, பல்வேறு காட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதில் நெல்லை மாவட்டம் முழுவதும் 800 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மதநல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் ராமராஜ்ஜிய ரத […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாளை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினரை […]
நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை மற்றும் 5 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிப்பு மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் அரசு சார்பாக சுமார் 9 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட சமுதாய பொது கழிப்பிடத்தை திறக்க அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு என்றால் கூட்டமாக திரள கூடாது. ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்த கூடாது எனவே ரதயாத்திரையும் வர முடியாது வர கூடாது. ரதயாத்திரை மீறி வந்தால் ஜனநாயக முறையில் அனுமதி பெற்று போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களை அடித்து கொன்ற காவல்துறையின் லத்தியும் துப்பாக்கியும் நாட்டின் பல கலவரங்களை நிகழத்திய விஷ்வ […]
நெல்லை : ஏர்வாடியில் பள்ளி ஆண்டு விழாவில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கண்பாதிப்பு சம்பவத்தில் பள்ளி தாளாளர், ஒளி, ஒலி அமைப்பாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.