நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை இன்றி அழிவின் விளிம்பிற்க்கு தள்ளப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் இளைஞர்கள் மீட்டெடுத்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. சீதபற்பநல்லூரை அடுத்த கருவநல்லூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வெறும் 6 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் இந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரே அடியாக குறைந்தது. 40 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் […]
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து 9 – வது நாளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும், பேரிரைச்சலுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, குற்றால அருவிகளில் குளிப்பதற்கு, காவல்துறையினர் தடை விதித்திருக்கின்றனர். நீராட வந்த சுற்றுலா பயணிகள், குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால், ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இரண்டாயிரம் மரங்களை திருநெல்வேலி முதல் தென்காசி வரையில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்காக அகற்றும் பணி தொடங்கியுள்ளது . இதன் காரணமாக பசுமையாகவும் வழிப்போக்கர்கள் இளைப்பாற வசதியாக இருந்த சாலை தற்போது வெறுமையாக காட்சியளிக்கிறது. திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் நெடுஞ்சாலை தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சாலை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் இருபுறமும் புங்கை மரம், வேப்பமரம், ஆலமரம், புளியமரம் மருதமரம் என பசுமையாக இருக்கும். பயண நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக […]
பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 143 அடி உயரமுள்ள காரையார் அணையின் நீர்மட்டம் 64 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு இரண்டாயிரத்து 667 கனஅடியாக இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 84 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 58 கனஅடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி […]
8 வயது சிறுமியை,சகோதரனான 14 வயது சிறுவன் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அடித்துக் கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த கிழக்குஅழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் சின்னராமசாமி. அவரது 14 வயதான மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. சின்னராமசாமி வெளியூரில் வேலைபார்த்து வருவதால் அவரது மகனும் மகளும் பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். நேற்று சிறுவனை அவரது பாட்டி ஞானபிரகாசம் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், களைகொத்தியால் பாட்டியையும் சகோதரியையும் சரமாரியாக […]
2010ஆம் ஆண்டு செங்கோட்டை – கொல்லம் வழித்தடத்தில் மீட்டர்பாதையை அகலப்பாதை ஆக்குவதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் கொல்லம் – புனலூர் இடையே அகலப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கோட்டை – புனலூர் இடையிலான 49கிலோமீட்டர் தொலைவில் பாலங்களைப் புதுப்பித்தல், குகைகளை அகலப்படுத்துதல் எனப் பல வேலைகள் நடைபெற்றதால் நீண்டகாலத்துக்குப் பின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதையைப் போக்குவரத்துக்காகத் திறந்துவிடும் விழா புனலூரில் இன்று நடைபெற்றது. இதில் ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் […]
ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பியார் கோவிலுக்கு ஆற்றைக் கடந்து சென்ற பக்தர்கள், மறுகரைக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்தனர். புகழ்பெற்ற திருக்குறுங்குடி அழகிய நம்பியார் கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். நம்பியாற்றைக் கடந்துதான் இக்கோவிலுக்குச் செல்ல முடியும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவிலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள், மீண்டும் மறுகரைக்குத் […]
சுற்றுலா பயணிகள் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் குற்றாலம் வனப் பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் தடுப்பு வளையத்தைத் தாண்டி விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை […]
தென்மேற்கு பருவ மழை நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் தொடங்கியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழையோடு கூடிய பலத்த காற்றும் வீசியது. குற்றால வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை சற்று ஓய்ந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோடை விடுமுறை என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் அருவிகளில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. […]
சுற்றுலாப் பயணிகள் தென்காசி அருகே உள்ள குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியதையடுத்து குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து நேற்று இரவு அதிகரித்தது. நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை […]
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இன்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். பனங்குடியில் பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் வழிகாட்டிகள் மக்கள்தான் என்றும், மக்களின் தேவையை அறியாமல் எதுவும் செய்ய முடியாது என்பதால் நேரில் சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் நாளை தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளை அனுமதிக்காமல் பூட்டி வைத்ததால் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். தினமும் இரவு 7.50 மணிக்கு நெல்லை விரைவு ரயில் சென்னைக்கு புறப்படுகிறது. முன்பதிவில்லா பெட்டியில் ஏறுவதற்காக பிற்பகல் முதலே ஏராமானோர் ரயில் நிலையத்தில் காத்திருந்த நிலையில், என்ஜின் அருகே உள்ள இரு முன்பதிவில்லா பெட்டிகளும், பூட்டி வைக்கப்பட்டிருந்தன. ரயில்வே தொழிற்சங்கத்தினர் பெட்டியை முன்பதிவு செய்திருப்பதாக காரணம் கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாத பயணிகள் […]
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்த மாணவன், 12 ஆம் வகுப்பு தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, தினேஷ் நல்லசிவன் என்ற மாணவர் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவும் டாஸ்மாக் கடைகளை மூடவும் வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்து, கடந்த 2 ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில், மாணவர் தினேஷ் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தனிநபருக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் இடையே நெல்லையில் ஏற்பட்ட தகராறுகாரணமாக திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகினர் மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரில் நிலஉச்சவரம்பு சட்டப்படி தனி நபர் ஒருவரிடம் 60 சென்ட் இடத்தை அரசு கைப்பற்றியது பின்னர் அரசு போக்குவரத்த கழகம். மின்வாரியதிற்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடம் தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமானது என வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்து அதிகாரிகாரிகளுக்கும் அந்த தனிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் […]