திருநெல்வேலியில் அடையாளம் தெரியாத இளைஞர் உடல் மீட்க்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் மேலப்பாளையம் ஹரீம் நகர் பகுதியில் கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத இளைஞர் உடல் மீட்க்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலப்பாளையம் போலீசார் தற்கொலையா, கொலையா என விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் ஆகஸ்டு 7முதல் செப்டம்பர் 25வரை செங்கோட்டையில் இருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.35மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. திங்கட்கிழமைகளில் ஆகஸ்டு 6முதல் செப்டம்பர் 24 வரை சென்னை எழும்பூரில் […]
திருநெல்வேலியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 3 லட்சம் மதிப்பில்லான கள்ள நோட்டுகளை தென்காசியை அடுத்த குற்றாலத்தில் புழக்கத்தில் விட முயன்ற இருவரை தென்காசி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் இன்று 2ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் பிரதான, ஐந்தருவி, பழைய அருவிகளில் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆம் நாளாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருநெல்வேலி அருகே குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு சரியாக இட ஒதிக்கீட்டை கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே பிஎம்டி (PMT) கல்லூரியில் குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு சரியாக இட ஒதிக்கீட்டை கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதை கண்டித்து ராஜா தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருநெல்வேலியில் தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று 7- வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்றது. 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளுக்கு நாள் பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லாரிகள் சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி, டீசல் விலைஉயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 22ம் தேதி மட்டும் பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருநெல்வேலியில் இருந்து போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து திண்டுக்கல்லிற்க்கு போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 1440 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.4 பேரை கைது செய்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை அம்பாசமுத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு 3 டன் ரேசன் அரிசி கடத்த முயற்சி செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை அம்பாசமுத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு 3 டன் ரேசன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் அரிசி கடத்தியதாக ஆலங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ், குட்டி, அசோக்குமார், அருள் ஆகியோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து வரும் 6-ம் தேதி முதல் ஆக.4 வரை நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லை ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர். நெல்லை சந்திப்பு, உடையார்பட்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரது ஐந்து வயது மகன் செல்வம் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைகளிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடத் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுத் திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி, கருப்பாநதி அணைகளிலிருந்து கார்ப் பருவ நெல் பயிரிடுவதற்காக ஜூன் 22முதல் அக்டோபர் 24வரை 125நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் வட்டங்களில் எட்டாயிரத்து 225 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் […]
சிஏஜி அறிக்கையில் கூடங்குளம் அணுஉலையில் முதல் அலகு 222 நாட்கள் மூடப்பட்டதால், அரசுக்கு 950 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் ரஷ்யக் கூட்டமைப்பு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இரண்டாயிரத்து 619 நாட்கள் தாமதமாக தொடங்கப்பட்ட முதலாவது அலகு, எரிபொருள் நிரப்புவது, தொழில்நுட்ப காரணங்களால், 2015ம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. எரிபொருள் நிரப்புவதற்கு 60 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில், […]
குற்றால அருவிகளில் தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரமாக பெய்து வருவதை தொடர்ந்துநீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாவட்டம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் மகன் சக்தி என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வந்துள்ளார். குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி புலியருவி மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்து விட்டு பழைய குற்றாலத்தில் குளித்து […]
அரிசி ஆலை உரிமையாளரிடம் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கீழப்பாவூரில் ரூ.3.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கியிலிருந்து எடுத்து வந்த ரூ.3.5 லட்சத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு கடைக்கு சென்றபோது திருட்டு நடைபெற்றுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருநெல்வேலி நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 12-ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது திருநெல்வேலி குற்றவியல் நடுவர் மன்றம் எண் 1-ல், நெல்லை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகி ஐ.கோபால்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் தரப்பில் அவ ரது வழக்கறிஞர் ஹரி ஆஜ ரானார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், […]