தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு …!!
நெல்லை : ஏர்வாடியில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு அடைந்துள்ளனர். பள்ளியின் ஆண்டு விழாவில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒளி கொண்ட மின்விளக்குகளால் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி ஆண்டு விழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு. கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரத்தில் கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.