விபத்து 1 1/2 வயது குழந்தை உட்பட இருவர் பரிதாபமாக பலி..!!

Published by
Dinasuvadu desk

நெல்லை அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம்நகர் ஈசுவரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனசேகர் (வயது 25). இவருடைய மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு பாலமுகில் (2½) என்ற மகனும், புகல்யா (1½) என்ற மகளும் உண்டு.
இவர்கள் உறவினர் திருமணம் விழாவில்  கலந்து கொள்வதற்காக சிவரஞ்சனி தனது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன்  ஆட்டோவில் சிங்கிகுளத்திற்கு சென்றார். ஆட்டோவை வனராஜ் ஓட்டினார்.
பின்னர் திருமண நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அவர்கள் அதே ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர். நெல்லை அருகே உள்ள பிராஞ்சேரி விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே சிங்கிகுளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (53), அவருடைய மனைவி வள்ளி, பேத்தி கார்த்திகா (10) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 5 பேரும், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
படுகாயம் அடைந்த குழந்தைகள் உள்பட 8 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை புகல்யா, முருகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

21 minutes ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (05/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…

36 minutes ago

“புயலுக்கு இதுதான் தீர்வா? சுயநல ஆட்சியாளர்கள்..” அறிக்கையில் சீறிய விஜய்!

சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…

44 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல் – மீனாவிடம் உண்மையை உளறும் பார்வதி ..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்..  நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…

1 hour ago

“உடனே விடுவிக்க வேண்டும்”..ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை! நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…

2 hours ago

மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!  ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?

மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற…

2 hours ago