10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 12ஆம் வகுப்பு மாணவன்..!!
ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்த 17 வயது மாணவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இவரும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியும் காதலித்து வந்தனராம். சம்பவத்தன்று மாணவர் பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றாராம்.
அங்கு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக மாணவர் கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். பின்னர் அவருடைய வீட்டுக்கு மாணவி சென்று விட்டார். அடுத்த சில நாட்களாக மாணவியை அந்த மாணவர் சந்திக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவரை நேற்று முன்தினம் சந்தித்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டாராம். அதற்கு அந்த மாணவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அந்த மாணவி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இதன் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவரை போலீசார் கைது செய்தனர்.
DINASUVADU