மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி ..!!
உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை குறைக்க கோரியும் , தமிழில் தேர்வு எழுதும் நடைமுறையை மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பாஸ்கர் தொடர்ந்து மாணவர்கள் விரோத போக்குகளை கடைப்பிடித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினார்.பருவ தேர்வு வரும் 6 மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெயரை சொல்லி கட்டணத்தை உயர்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.இந்நிலையில் இந்த பருவத்தேர்வுக்கு வருகைப்பதிவேடு குறைந்தால் தனித்தனியே பாடங்கள் அடிப்படையில் அபராதம் , ஏற்கனவே மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதிவந்த முறையை மாற்றி ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டுமென மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் செயலை கண்டித்து மாணவர்கள் கோவமடைந்தனர்.திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரி மானவர்கள் கடந்த 10 நாட்களாக பல்கலைகழகத்தை கண்டித்து பல கட்ட போராட்டம் நடத்தினர்.உயர்கல்வி அமைச்சருக்கு தபால் அனுப்புவது , கருப்பு பேட்ஜ் , வகுப்பு புறக்கணிப்பு என பல்வேறு கட்டங்களாக அந்தந்த கல்லூரி வளாகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் இன்று பல்கலைக்கழக கோரிக்கைகளை வலியுறுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு மூன்று மாவட்ட கல்லூரி மாணவ , மாணவிகள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அப்போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அப்போது மாணவர்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக வளாகம் முன்பு மாணவர்கள் இருந்தனர்.அப்போது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இறுதியில் மாணவர்களை கலைக்க காவல்துறை தடியடி நடத்தினர்.இதில் மாணவ மாணவிகளுக்கு பலத்த காயம் அடைந்தனர்.
DINASUVADU