நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அம்பாசமுத்திரம் சுற்றுப்பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பதிவாகி வருகிறது. இதனால், கடனாநதி அணை, முழு கொள்ளளவான 85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 600 கனஅடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. பாபநாசத்தில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம் 109 அடியாக அதிகரித்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை, 91 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 123 கன அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 63 அடியாகவும் உள்ளது.