நெல்லையில் பா.ஜ .போராட்ட எச்சரிக்கை..!!
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே கழிவறை கட்டும் பணியை ஒரு வாரத்திற்குள் தொடங்காவிட்டால் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக எச்சரித்துள்ளது.
வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் சிலை அருகே இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தங்களில் கழிப்பிட வசதி கோரி, பாஜக சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் இடம் இருந்தபோதிலும், கழிவறைக்கு இடம் ஒதுக்காத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும், நிதி ஒதுக்கியதோடு வேலை முடிந்துவிட்டது என பாராமுகமாக இருக்கும் மாநகராட்சியைக் கண்டித்தும் பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடனர் .ஆனால் காவல்துறை அனுமதியற்ற ஆர்ப்பாட்டம் என்று கூறியதாலும் ,

அதிகாரிகளின் ஒரு வாரத்துக்குள் கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினர் போராட்ட முயற்சியை கைவிட்டனர் .
இது குறித்து மாநில மகளிரணி பொதுச் செயலர் கனி அமுதா கூறுகையில், “வண்ணார்பேட்டையில் கழிவறை கட்டும் பணியை இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்காவிட்டால், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு BJP சார்பில் பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ என்று எச்சரித்தார்.

DINASUVADU