நெல்லையில் காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் பலி …!
நெல்லையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 5 – ந்தேதி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வம் , இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு முன் கடந்த 5 – ஆம் தேதி காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து இளைஞர் செல்வம குதித்தார் .நெல்லை – நாகர்கோவில் சென்ற பேருந்தில் பயணம் செய்த கோவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் பேருந்தில் இருந்து குதித்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.