திருநெல்வேலியில் தகராறு !நடுவழியில் பேருந்துகளை நிறுத்திய ஓட்டுனர்கள் !அவதிப்படும் மக்கள்

Default Image

தனிநபருக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் இடையே நெல்லையில்    ஏற்பட்ட தகராறுகாரணமாக திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகினர் மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரில் நிலஉச்சவரம்பு சட்டப்படி தனி நபர் ஒருவரிடம் 60 சென்ட் இடத்தை அரசு கைப்பற்றியது பின்னர் அரசு போக்குவரத்த கழகம். மின்வாரியதிற்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடம்  தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமானது என வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்து அதிகாரிகாரிகளுக்கும் அந்த தனிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டதாக கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் அனைத்து அரசு பேருந்துகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர் பொது மக்கள் கூறுகையில் திடீர் வேலைநிறுத்தத்தால் மிகவும் பாதிக்கபட்டதாகவும் எங்களை பாதி வழயிலே இறக்கிவிடப்பட்டதாகவும் இந்த பிரச்சனையில் அரசு தலையீட்டு உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்