தமிழ் மொழிக்காக போராட்டம் அறிவித்தனர் கல்லூரி மாணவர்கள்..!! நெல்லையில் பரபரப்பு..
திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார்.
அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இனிமேல் தேர்வை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்றும் அதில் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்..
ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவு மாணவர்கள் மத்தியில் ஒரு எதிப்பை கிளப்பியது.கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர்.இந்நிலையில் தான் இந்திய மாணவர் சங்கம் போராட்ட அறிவிப்பை வெளியீட்டது.
இன்று இந்திய மனவ்வர் சங்கத்தினர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் போராட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் :
” அதிகமாக ஏழை மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் தான் மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகம் , அதிக மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே தமிழ் வழியில் கல்வி கற்று வந்த மாணவர்கள் படிக்கின்றார்கள் என்று தெரிவித்தனர்”.
தொடர்ந்து பேசிய அவர்கள் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மாணவர்களின் கல்வியை சீரழிப்பதாகவும் , மாணவர்களை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் தெரிவித்தனர்.தொடர்ந்து பல்கலைக்கழகம் இந்த முடிவை மாற்றவில்லை என்றால் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வருகின்ற செப்டம்பர் 12 ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மூன்று மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ம.சு பல்கலைக்கழகம் முற்றுகை போராட்டம நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வீ.மாரியப்பன் , திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தினேஷ் , தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜாய்சன் ,மாவட்ட செயலாளர் சுரேஷ் பமற்றும் மூன்று மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆங்கிலத்தில் எழுதுவதை கண்டித்து ஏற்கனவே கையெழுத்து இயக்கம் , கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடதக்கது…
DINASUVADU