குறைந்த விலையில் விற்கப்பட்ட போலி சோனி டிவியை வாங்கி வீட்டுக்கு வந்து போட்டு பார்த்து ஆன் ஆகாததால், காவல் நிலையத்தில் புகார். சாதாரணமாக வீட்டில் வாங்க கூடிய வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு ஒவ்வொரு பிராண்டட் நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனங்களை நம்பி நாம் உடனடியாக பொருள் வாங்கி விடுவோம். அதுபோல மக்கள் மதிப்பு பெற்ற நிறுவனம் தான் சோனி. திருச்சியில் குறைந்த விலைக்கு சோனி டிவி தருவதாக திருச்சியில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை […]
6 கோடி அல்லது 2 கோடி கொடு என திருச்சியிலுள்ள தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பலிடமிருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர். திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் தான் 12 வயது சிறுவன் முத்தையா. இவன் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்த போது, தொழிலதிபரின் நம்பருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசிய […]
திருச்சியில் வரத்து குறைந்ததால் கிலோ 100 க்கு உயர்ந்த வெங்காய விலை. திருச்சியில் கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் அதிக மழை பெய்வதால் வரத்து குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் பயிரிடப்படக்கூடிய வெங்காயங்கள் மழை காரணமாக நோய் தாக்குதலுக்குட்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 15 டன் வெங்காயங்களை இறக்குமதி செய்ததாகவும் தற்பொழுது வெறும் 3 டன் மட்டுமே கிடைப்பதால் வெங்காய விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்னும் இரு மாதங்களுக்கு வெங்காய விலை […]
காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது. திருச்சியில் அயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கு தற்காப்பு காலை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை செய்து காட்டினார். அதன்பின் காவலர்களுக்கு உரையாற்றிய அவர், காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது என தெரிவித்துள்ளார். மேலும், […]
திருமணமாகி 40 நாட்களேயான புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் டோல்கேட்டுக்கு அருகிலுள்ள வாழ்வந்தான்புரத்தில் வசித்து வருபவர் அருள் சாமி. இவர் கடந்த மாதம் கிறிஸ்டி ஹெலன்ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாட்கள் முதலே இருவருக்கும் இடையில் சண்டை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 26வயதான புதுமண பெண்ணான கிறிஸ்டி வீட்டின் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு அதிகாலையில் சென்றுள்ளார். வெகு […]
திருச்சியில் ஜவுளி கடையில் ஜஃபிரா எனும் பெண் ரோபோ. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ,இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் செயல்படும் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அறியவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும், கடைக்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அறியவும் ஜஃபிரா எனும் பெண் ரோபோவை அறிமுகப்படுத்தி […]
திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்தமிழகத்தில் சேவல் சண்டை என்பது பிரபலமான ஒரு விளையாட்டாக கருதப்படுவதுடன், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை போல இது கருதப்படுகிறது. தங்களுடைய சேவலை சண்டைக்கு விட்டு, ஜெயிப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த விளையாட்டை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய அய்யன் தோப்பு என்ற பகுதியில் அனுமதியின்றி […]
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த இசைக்கலைஞர்கள் பேஸ்புக் நேரலையில் மூலம் கச்சேரி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாதாரணமாகவே கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் சிறப்பு நிகழ்வுகள் இன்னிசைக் கச்சேரிகளில் பாடும் இசை கலைஞர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் எப்படி மற்ற தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தொழில் […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அதிக அளவில் மக்கள் வெளியில் நடமாட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேவைக்கேற்ப இ பாஸ் உத்தரவு பெற்று அதன் பின்னரே மற்ற மாவட்டங்களுக்கு செல்லலாம் என தமிழ்நாட்டில் உத்தரவும் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மக்களை அதிகளவில் பரிசோதித்து எங்கிருந்து வருகின்றனர் என்று ஆராய்ந்து பார்த்து அனுப்பக்கூடிய இந்த சூழ்நிலையிலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் ஒருவர் […]
இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஓட்டுநர்கள் போராட்டம். தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், அரசாங்கம் இதற்கான நடவடிக்கையாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோர் இ பாஸ் உத்தரவை பெற்று அதன் பின்னே செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் இ பாஸ் விண்ணப்பிக்க கூடிய 100 பேரில் 10 பேருக்கு […]
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், திருச்சியிலும் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதுவரை திருச்சியில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே குரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திருச்சியில் பல்வேறு நடவடிக்கைகள் […]
தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வழங்கிய திருச்சி தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சி உறையூர் குறத்தெரு அருகிலுள்ள ராமலிங்க நகரில் தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆய்வகத்தில் காய்ச்சல், நீரிழிவு, தைராய்டு, குழந்தையின்மை, உடல் பருமன் என அனைத்து வகை பரிசோதனைகளும் செய்யப்படும். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை உறுதி செய்யும் பரிசோதனையை மேற்கொள்ள இந்த ஆய்வகத்திற்கு […]
திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் முருகன் சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல். திருச்சியில் உள்ள மிகப் பெரிய நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 30 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் அந்த கடையிலேயே சுரங்கம் போல சுவரில் ஓட்டை போடப்பட்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முக்கியமான கொள்ளைக்காரர்களாகிய முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை தேடும் […]
திண்பண்டம் என்று நினைத்து, நாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு. திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தொட்டியம் பகுதியை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 3 பேர் அங்குள்ள காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்துள்ளனர். மீன்களை பிடித்துக்கொண்டு தனது சகோதரர் பூபதி வீட்டிற்கு கொண்டு சென்ற தமிழரசன், மீதமுள்ள நாட்டு வெடி ஒன்றை அங்கு வைத்து சென்றுள்ளார். அந்த வேளையில், அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணுதேவ், மீதமுள்ள […]
திருச்சி மாவட்டத்தில் நாட்டு வெடியை தின்பண்டம் என்று கடித்த சிறுவன் தலை சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளஅலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்கதரன் தமிழரசன் மற்றும் மோகன்ராஜ் உறவினர்களான இவர்கள் நேற்று முன்தினம் பாப்பாபட்டி பகுதியில் உள்ள ஒரு கிரசரில் மூன்று நாட்டு வெடிகுன்டு விலைக்கு வாங்கிவந்து மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசி மீன் பிடித்து உள்ளனர் இந்த நிலையில் இதில் மீன்பிடித்து விட்டு அலங்கரையில் உள்ள […]
திருச்சியில் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி. திருச்சி மாவட்டம், மணப்பாறை சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உதயதர்ஷினி. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஏற்கனவே தேர்வுகள் நடைபெறும் என்று , அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்கி விட்டு வீடு வந்த உதய தர்சினி, மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். […]
மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்ட நரி. விலங்குகளுக்கு எதிராக தொடரும் சித்திரவதைகள். கடந்த சில நாட்களாகவே விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அன்னாசி பழத்தில் வெடி வைத்து, கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, சிறுத்தை, மாடு மற்றும் நாய் என விலங்குகளுக்கு சித்திரவதைகள் தொடர்ந்த நிலையில், தற்போது […]
பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய். இன்று பல குடும்பங்களில் கணவன் – மனைவி சண்டையில், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பலர் தங்கள்து குடும்ப தகராறில் ஏற்படும் கோபத்தால், குழந்தைகளை அந்த கோபத்திற்கு இரையாக்கி விடுகின்றனர். அந்த வகையில், திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே, பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு, குழந்தையின் தாய் எலி பேஸ்ட் கொடுத்து கொடூரமான முறையில் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் […]
திருச்சியில் 6 ரயில் நிலையங்களில் ரத்ததான ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 22ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் […]
மகன் இறந்த சோகம் தாங்காமல் குடும்பமே சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் விஜயகவுரி. அவர்களின் மகன் விஜயகுமார் நேற்று முன்தினம் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகனின் இழப்பை தாங்க முடியாமல் ஆசிரியை விஜயாகவுரி அவரது இரு மகள்கள் விஜயலக்ஷ்மி மற்றும் விஜயவாணி ஆகியோருடன் சிலிண்டரை வெடிக்க செய்து உயிரிழந்துள்ளனர். […]