பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் […]
திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள். திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சிக்கு வந்த விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், 60 விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 55 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MP என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பணமோசடி புகாரின் அடிப்படையில் திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பூட்டை […]
திருவாரூர்:அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த பல்வேறு புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு […]
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 29) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஆனால்,இன்று தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும்,இன்றைய விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிப்பதற்காக மட்டும் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் […]
திருச்சி:என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது பள்ளி,கல்லூரி மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில்,திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரவை சேர்ந்தவரான மாணவி சௌமியா (வயது 22),திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இரண்டாம் ஆண்டு பபடித்து வந்த நிலையில்,நேற்று விடுதியில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு […]
திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளன. இந்த நிலையில், திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி மற்றும் கோலாலம்பூர் […]
11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூரில் அடுத்துள்ள தனியார் பள்ளியில் ஷர்மிளா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாயமான நிலையில் மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தனது மகன் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் […]
தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் 1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரகாளியம்மன் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் பாக்கு படைத்தல் விழா நடைபெற்றது. பின்னர், கடந்த 8ம் தேதி முதல் பூத்தட்டு சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கோவில் கதவைடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், கோவில் முன்பு பக்தர்கள் 1,000 பானையில் […]
திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனினும்,வழக்கம்போல் இலவச தரிசனம் எப்போதும் செயல்படும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.100 என்ற ஒரே கட்டண தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழக்கம்போல் இலவச […]
திருச்சி:உறையூரில் தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது. திருச்சி மாவட்டம்,உறையூரை சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் அவரது மனைவி நிசா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,5 வது குழந்தையான தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,குழந்தையை விலைக்கு வாங்கிய தொட்டியம் கீழ சீனிவாச நல்லூரை […]
திருச்சி நாவலூர்குட்டபட்டு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். பொங்கல் திருவிழாவை யொட்டி திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு எனும் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றிருந்த பார்வையாளர் வினோத் என்பவர் காளை முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது இதுவரை 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் […]
திருச்சியிலுள்ள பெரியசூரியூரில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் பொழுது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள பாலமேடு மற்றும் திருச்சியில் உள்ள பெரிய சூரியூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரிய சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த […]
திருச்சி என்.ஐ.டியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர் சென்று திரும்பிய 577 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சி என்.ஐ.டியில் கொரோனா உறுதியானவர்களில் பலர் வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள், மேலும் ஓமைக்ரான் தொற்றா..? என்பதை கண்டறிய மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி:இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த 8 குழுக்களில்,சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில்,தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில், சர்மிளா சங்கர் என்பவரது தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி குழு டி-சர்ட் […]
ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை […]
திருச்சி:சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் […]
திருச்சி:பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன் என்பவர், தற்கொலை செய்து கொண்டது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த நவ.19 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் […]
கொலைசெய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் திருச்சி, திருவெறும்பூரில் 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை […]
சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூன்று நாளில் பெற்று […]