திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் . அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் […]
திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் – உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் – அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு நின்று […]
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நகருக்கு வந்த விமானத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டது… இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்…
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன்பு திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550 காளைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் காளைகளைப் பிடிப்பதற்கு 600 வீரர்கள் வந்துள்ளதால் ஒரு மணி நேரத்துக்கு 200பேர் கொண்ட ஒரு குழுவுக்கு என்ற முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களின் சோதனைக்குப் பின்னரே காளைகள் களமிறக்கப்படுகின்றன. முதலில் சூரியூர் கோவில் காளை இளையகாசிக்குப் பூசைகள் செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதையடுத்து […]
திருச்சி:கடந்த 8வது நாளாக தொடர்கிறது அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருவதையொட்டி ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொழிலாளர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மக்களின் நலன் கருதி குறைந்த பட்ச எண்ணிக்கையில் பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கி வருகின்றனர். இதில் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தை தனியார் ஓட்டுனர் ஒருவர் இயக்கினார். அவர் இடது கையில் செல்போன் பேசிகொண்டே வலது கையில் பேருந்தை இயக்கி உள்ளார். மேலும் கியர் போடும் போதும் போனை வைக்காமல் வலது கையாலேயே கியரையும் போட்டு வண்டி ஒட்டி […]
திருச்சி அருகே, பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளுக்கான தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையின், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். மேலும், தனியார் பள்ளிகளில் கட்டண வேறுபாடுகளை சரிசெய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சரிசெய்யப்படும், என்றும் தெரிவித்தார். முன்னதாக, கோபிசெட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் “அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் நிதியில்லை” என்று […]
திருச்சி: தமிழகம் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தினக்கூலி அடிப்படையில் போக்குவரத்து ஊழியர்கள் தேவை என திருச்சி பணிமனையில் விளம்பரப்பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிலாளர் சங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். முன்னறிவிப்புமின்றி […]
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தினக்கூலி அடிப்படையில் அரசு பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தேவை என அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சில தனியார் பேருந்துகள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டதால், பயணிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திற்குள் தனியார் ஆம்னி பேருந்துகள் சென்று பயணிகளை ஏற்றி வருகின்றன. தனியார் நகரப் பேருந்துகள் எந்த […]
தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும், வேலைக்கு அரசு பஸ்ஸில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலானோர் அரசு பஸ்ஸில் பயணம் செய்து கிராமபுறத்திலிருந்து திருச்சிக்கு வேலைக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் வருபவர்கள். அவர்கள் இன்று பஸ் ஓடாததால் பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்கள். அதலால், தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேவை என்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விளம்பர பலகை […]
கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.
திருச்சி மாவட்டம் அருகே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது இடிபாடுகளை அகற்றும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 528 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்; சென்னை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
திருச்சியில் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த அப்பு என்பவர் கைது; அவரிடமிருந்து 28 சவரன் நகை, ரூ.20,500 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டம் போடப்பட்டது. அந்த திட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை நேரில் அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இது சுமார் 1,00,000 கன அடி கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டி ஆகும். இந்த தொட்டி அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என […]
திருச்சி மாவட்டம் பூவாளூர் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.இதில் மாணவர்கள் கலந்து கொண்டு மிகவும் ஆர்வமாக அவர்களது இரத்த வகையை கண்டறிந்தனர்.இந்த சோதனையை சுடர் இரத்த தான விழிப்புணர்வு குழுவை சார்ந்தவர்கள் இரத்த வகை கண்டறியும் சோதனையை செய்தனர்.
கலெக்டர் வீரராகவராவ் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டு அரசு ஊழியர் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த டி.ஆர்.ஓ. காலனியில் நேற்று காலை 7.30 மணிக்கு திடீர் ஆய்வு நடத்தினார். இதில் பல இடங்களில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டார். அதில் கொசு உற்பத்தியாகி இருந்ததை கண்டதும், மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக வந்து கொசு ஒழிப்பு மருந்தை ஊற்றினர். உடனே கலெக்டர் கோபத்துடன் “நான் பார்த்த பிறகு, என் கண்முன் மருந்து ஊற்றி சமாளிக்கும் […]
மதுரை அரசு மருத்துவமனையில், ரூ.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பிரசவ வார்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த 6 மாடி புதியகட்டிடத்தில் கட்டிடத்தில், 850 படுக்கைகள் உள்ளன. மேலும் பழைய பிரசவ வார்டில் இல்லாத பல வசதிகள் இங்குள்ளது. ஆனால், உறவினர்கள் இருக்கவும், தங்கவும் வசதிகள் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இயற்கை மகப்பேறு, அறுவை சிகிச்சை மகப்பேறு, கர்ப்பப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதால், மதுரை மற்றும் தென்மாவட்டங்களிலிருந்தும் நிறைய கர்ப்பிணிகள் […]