திருச்சி:அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.மணப்பாறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜோசப்அருள் லாரியை ஓட்டி வந்தார். நேற்று காலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே தனியார் மருத்துவமனை எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.அப்போது சென்னையிலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.அரை மணி நேரம் […]
துறையூர்: திருச்சி மாவட்டம் ஊரின் மையப் பகுதியில் துறையூர் பஸ்நிலையம் அமைந்துள்ளது.தனியாருக்கு சொந்தமான ஓட்டல்கள் மற்றும் தனியார் கடைகள் பஸ்நிலையத்தில் அதிக அளவில் உள்ளன. அதேபோல் நகராட்சிக்கு சொந்தமான கடைகளும் உள்ளது. தனியார் ஓட்டல்களில் இருந்து மீதம் ஆகும் உணவு பொருட்கள் மற்றும் சாம்பார் உள்பட அனைத்து கழிவுபொருட்கள், நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு, கழிவுநீர் ஆகியவை பஸ்நிலையத்தில் உள்ள இரு கழிவுநீர் வாய்க்கால்கள் வழியாகவே வெளியேற்றப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தினந்தோறும் […]
திருச்சி: கோபால் மகன் அருண்குமார் இவர் திருச்சி தில்லைநகர் ஜீவா நகரை சேர்ந்தவர். இவர் அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நேற்றுமுன்தினம் மாலை செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 2 பேர், அருண்குமாரிடம் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அருண்குமார் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார்.அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் பறித்துச் சென்றது பீமநகரை சேர்ந்த […]
லால்குடி:கடந்த 13ம்தேதி லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்பெருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இயேசுவின் புதுமைகளான, தூய அன்பும் நட்பும், இறைவேண்டலில் தாழ்ச்சி, கடவுள் பிரிவு, பாவ மன்னிப்பும் நம்பிக்கையும், என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர சப்பரபவனி இரவு 10 மணிக்கு அடைக்கல நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேர் வீதி உலா வந்தது. இதில் சுற்றுப்பகுதிளில் இருந்து அனைத்து பகுதி […]
திருச்சி:வரும் 24ம் தேதி முதல் திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஏப்ரல் 21ம் தேதி (நேற்று) மதியம் முதல் நாளை (23ம் தேதி) வரை திருச்சி அஞ்சலக கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலங்களில், திருச்சி தலைமை அஞ்சலக இரவு அஞ்சலகம் உட்பட எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யமுடியாது.அனைத்து தபால் அலுவலகங்களும் வழக்கம்போல மீண்டும் 24ம் தேதி முதல் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும். விரைவு தபால், பதிவு தபால் அனுப்ப […]
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ,காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பின் அதன்படி கர்நாடகா அரசு செயல்படாவிட்டால் தமிழக காங்கிரஸ் போராடத் தயார் என தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்காவிட்டால், மக்கள் எப்படி மதிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி: பற்பசை மற்றும் லக்கேஜில் ரூ.11லட்சம் மதிப்பிலான தங்கத்தைமறைத்து சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த வாலிபரை திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கத்துறையினர் பிடித்தனர்.சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு ஸ்கூட் டைகர் விமானம் நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததன் அடிபடையில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர். அதில் சிவகங்கையை சேர்ந்த முகமதுமீரா என்ற வாலிபரின் உடமைகளை பரிசோதித்தபோது, பேஸ்ட் மற்றும் அவரது லக்கேஜில் […]
திருச்சி: வருகின்ற 23ம் தேதி(நாளை)திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மனித சங்கலி அறப்போராட்டம் நடைபெற இருகின்றது. இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர்அறிக்கை வெளியிட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்த தன்னுடைய சுயநல அரசியல் காரணங்களால் அமைக்காமல் காலம் தாழ்த்தி மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி […]
லால்குடி:சுப்ரமணியன் மகன் ஞானமணி லால்குடி ஆங்கரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் . நடராஜன் மகன் பாலகுமார. இருவரும் அடிக்கடி இடையாற்றுமங்கலம் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் இடையாற்றுமங்கலம் அடுத்த கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் இடுபட்டிருந்தனர் அப்போது மேற்கண்ட இருவரும் மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து 2 பேரையும் போலிசார் […]
திருச்சி:மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது.மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் பசீர்அகமது தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வகித்தார். வக்கீல்கள் தமிழகன், குணசீலன், நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி உமாமகேஸ்வரி, மக்கள் பாதை ஸ்டீபன், திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு […]
திருச்சி: சண்முகம் இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஏலநொச்சிமலையை சேர்ந்தவர். கடந்த 6ம் தேதி அப்பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சண்முகத்தை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சண்முகத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட சண்முகத்திற்கு தீவிர […]
திருச்சி முக்கொம்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்புப் பயணம் இன்று தொடங்குகிறது. தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்து. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், திருச்சி முக்கொம்பில் இருந்து, ஒரு குழுவின் மீட்பு பயணம் இன்று தொடங்கும் எனவும், மற்றொரு குழுவின் மீட்புப் பயணம் அரியலூரில் இருந்து நாளைமறுநாள் […]
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துத் திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் தங்கள் உடலை மணலில் புதைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, […]
திருச்சியில் பிஜேபி கொடி மற்றும் மோடி உருவ பொம்மையை எரித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட […]
திருச்சி:தனியார் பாய்லர் தொழிற்சாலை ஒன்று திருச்சி துவாக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் கடந்த வாரம் திங்கட்கிழமை 2 மாதம் ஊதியமும், ஏப்ரல் 7ம் தேதி 2 மாத நிலுவை ஊதியமும், மூன்று மாதத்திற்கு வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்வது போன்ற […]
ரயில் மூலம் மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டிற்காக திருச்சி சென்றடைந்த நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் வைகை விரைவு ரயிலில் புறப்பட்ட கமல்ஹாசன், வழியில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் ஆகிய இடங்களில் கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்தார். இதனிடையே, ரயிலில் தம்முடன் நிழற்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய பயணிகளுடன் அவர் படம் எடுத்துக் கொண்டார். உடன் வந்த செய்தியாளர்களிடம் தனித்தனியாக அவர் உரையாடினார். திருச்சி சென்றடைந்த அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக […]
திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதற்கு முன் முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் விவசாயிகளுடன் தினகரன் போராட்டம் நடத்தினார்.டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான […]
டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதற்கு முன் முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் விவசாயிகளுடன் தினகரன் போராட்டம் நடத்தினார்.டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற தினகரன் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டு […]
திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் நீதி மய்ய மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரயிலில் இன்று பிற்பகல் கமல்ஹாசன் பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது கமல்ஹாசன் ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதையடுத்து ரெயில் நிலையங்களில் சந்திக்கும் திட்டத்தை கமல் ரத்து செய்தார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். […]