திருச்சி விமான நிலையத்தின் இயக்குநர் குணசேகரன் ,திருச்சி விமான நிலையத்தில் 622 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், புதிய முனையம் அமைக்க விமான நிலையங்கள் ஆணையம் முடிவெடுத்துள்ளது. 622கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள புதிய முனையத்தில் ஒரேநேரத்தில் மூவாயிரம் பயணிகளைக் கையாளலாம். இதனிடையே கொச்சி மற்றும் பெங்களூருவுக்கு திருச்சியில் இருந்து விமான சேவை […]
3 ஆயிரம் சிசிடிவி காமிராக்களை திருச்சி மாநகர் முற்றிலும் பொருத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது. இதுவரை இத் திட்டத்தின் படி 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நகரின் எந்த மூலையில் நடைபெறும் குற்றத்தையும் தடுப்பதற்கான நவீனக் கட்டமைப்பு வசதிகள்1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்குள்ள பிரம்மாண்ட மின்னணு திரைகள் மூலம் குற்றவாளிகளின் நடமாட்டம் துல்லியமாக […]
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தனியார் கட்டுமானத்தை அகற்றாதது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோவிலின் அடிவாரத்தில் சாரதாஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.விதிகளை மீறி கட்டப்பட்ட இக்கட்டிடங்களை இடிக்க 2012ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் இன்னமும் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை என கூறி சுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அமர்வு தனியார் கட்டிடங்களை […]
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் பழனியாண்டி. வெற்றிலை விவசாயியான இவர் வீட்டில் பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள பசுமாடு ஒன்று கன்று குட்டியை ஈன்றது. அந்த கன்று குட்டி வழக்கமான கன்று குட்டியை விட வித்தியாசமாக 2 வாய்கள், 4 கண்கள் இருப்பதை கண்டு பழனியாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் […]
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமேனி என்பவர், பள்ளி நேரத்தில் தூங்குவது, செல்போன் பார்ப்பது உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சரிவர பாடங்களை நடத்துவதில்லை என்று கூறும் கிராம மக்கள், அதுகுறித்து கேள்வி எழுப்பும் பெற்றோரை ஆசிரியர் அலட்சியமாகப் பேசி மிரட்டுவதாகவும் கூறுகின்றனர். அவரை பணிநீக்கம் […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். மணப்பாறை அருகேயுள்ள புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி அவ்வூர் திடலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 496 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை லாவகமாக பிடித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
திருச்சியில் மதம் பிடித்த சமயபுரம் கோவில் யானை தூக்கி வீசியும் மிதித்தும பாகனை கொன்றது. திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 9 வயதான இந்த பெண் யானை கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானையின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்தார். அப்போது கரும்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசிய யானை ஆவேசமாக […]
திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது ஏன் என்று? வட்டார போக்குவரத்து அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள், வியாழக்கிழமை நடைபெற்றது. கருமண்டபம் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் நடந்த பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணிகளை ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, ஆய்வு முடிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை சரிபார்த்த ஆட்சியர், அதில் முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படாததைக் கண்டு […]
திருச்சி மகளிர் நீதிமன்றம், திருச்சி அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் வழங்கி, தீர்ப்பளித்துள்ளது. பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். இதுகுறித்த புகாரின்பேரில் அச்சிறுமியின் தந்தையை கைது செய்த போலீசார், திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கு 3 ஆயுள் தண்டனைகள் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, […]
திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரகம்பி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 65). விவசாயி. இவருக்கு ரமேஷ் (35), ராஜ்குமார்(28) என 2 மகன்கள் உள்ளனர். இதில் ரமேசுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்பவருடன் திருமணமானது. ரமேஷ் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக வீடு கட்டி, மனைவியுடன் குடியிருந்தார். ராஜ்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. அவர் மனைவி மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் […]
திருச்சி: ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராம ஊராட்சி, கடியாக்குறிச்சி கிராமத்தில், கலெக்டர் ராஜாமணி பிரதம மந்திரியின் இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தின்கீழ் 100 நபர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களும் புகையில்லா கிராமங்களாக திகழ வேண்டும் என்று மத்திய அரசு கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. புகையில்லா எரிவாயு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒரு காலத்தில் நமது நாட்டில் அடுப்பு […]