திருச்சி லால்குடி தண்டவாளத்தில் லாரி டயர்கள்.! ரயிலை கவிழ்க்க சதியா.?

Lalgudi Railway Track

திருச்சி மாவட்டம் லால்குடியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைத்த மர்ம நபர்கள். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த ஜூன் 1ஆம் இரவு லாரி டயர்கள் சில மர்ம நபர்களால் அங்கே வைக்கப்பட்டுளள்ன. அப்போது அந்தவழியாக வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சில பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றது.

இத சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் லாவகமாக செயல்பட்டு ரயில் வேகத்தை குறைத்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது மீண்டும் அதே இடத்தில் காவல்துறையினர் தங்கள் விசாரணையை துவங்கி உள்ளனர்.

ஏற்கனவே. மேலவாளடி பகுதியில் செல்போன் டவர்களை ஆய்வு செய்து சம்பவத்தன்று பதிவாகி இருந்த செல்போன் எண்களை கண்டறிந்து 10 நபர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  மேலும், மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை விசாரணையை துவங்கி உள்ளது. இது ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துவங்கி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TVK -AmitShah
mutharasan cpi tvk vijay
Shoaib Akhtar
aadhav arjuna and vijay
annamalai about vijay
AFG vs ENG - Champions Trophy 2025
TVK Leader Vijay speech at TVK First Anniversary Function