ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றாக கருதப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பையொட்டி, இன்று அதிகாலை 4.15 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம். எனவே, தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், லட்சக் கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் திரண்டனர். வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, ரெங்கநாதர் கோயில் விழாக்கோலம் பூண்டது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…