மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியர் நியமிக்க தீர்மானம் :மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது தாலுகா மாநாடு நேற்று நடந்தது. வட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரஸ்வதி ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்த மாநாட்டில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டுமென தீர்மானம் இயற்ற்றபட்டது.
மாவட்டகுழு உறுப்பினர் தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ லாசர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நடந்த நிர்வாகிகள் தேர்தலில் புதிய வட்ட செயலாளராக ராஜகோபால், வட்டக்குழு உறுப்பினர்களாக சீனிவாசன், பாலு, முத்துசாமி, கண்ணன், சுரேஷ், ஷாஜகான், வேலுசாமி, கோபாலகிருஷ்ணன், கருப்பையா, சரஸ்வதி ராஜாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டில், மணப்பாறை பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். நகராட்சி பகுதியில் நவீன குப்பை கிடங்கு ஏற்படுத்த வேண்டும். மணப்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.