திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது…!
திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கு முன் முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் விவசாயிகளுடன் தினகரன் போராட்டம் நடத்தினார்.டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற தினகரன் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டு போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது …!
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.