திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு நாளை துவக்கம் …!
திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் நீதி மய்ய மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரயிலில் இன்று பிற்பகல் கமல்ஹாசன் பயணிக்கிறார்.
இந்த பயணத்தின் போது கமல்ஹாசன் ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதையடுத்து ரெயில் நிலையங்களில் சந்திக்கும் திட்டத்தை கமல் ரத்து செய்தார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.