திருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து காவிரி ஆற்றின் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்…!
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துத் திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் தங்கள் உடலை மணலில் புதைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.
காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது.
அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துத் திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் தங்கள் உடலை மணலில் புதைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை, பட்டை நாமம் அணிந்தபடி மண்டை ஓடுகள் எலும்புகளையும் வைத்திருந்த விவசாயிகள் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.