திருச்சியில் காவிரி உரிமை மீட்புப் பயணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடக்கம்…!
திருச்சி முக்கொம்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்புப் பயணம் இன்று தொடங்குகிறது.
தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்து. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், திருச்சி முக்கொம்பில் இருந்து, ஒரு குழுவின் மீட்பு பயணம் இன்று தொடங்கும் எனவும், மற்றொரு குழுவின் மீட்புப் பயணம் அரியலூரில் இருந்து நாளைமறுநாள் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்வதையொட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஸ்டாலின் நேற்று வாழ்த்துப் பெற்றார்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருச்சி முக்கொம்பில் இருந்து ஸ்டாலின் தலைமையில் மீட்புப் பயணம் தொடங்குகிறது. ஜீயபுரம், முத்தரசநல்லூர், சத்திரம் பேருந்து நிலையம், முள்ளக்குடி வழியாக கல்லணையை இந்தக் குழு சென்றடைகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.