திருச்சி : ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் குரங்கம்மை குறித்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தமிழகத்திலும் பன்னாட்டு […]
திருச்சி : காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அதே போல திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆறும் நிரம்பி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து விளக்கம். கொள்ளிடம் ஆற்றின் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டது. அதுவும் […]
திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் ஜனவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி […]
திருச்சி ஜங்ஷனில் எஞ்சின் சோதனை ஓட்டத்தின் பொது தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கியதால் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களின் நேரமும் தாமதமானது. திருச்சி ஜங்க்சனில் ரயில் எஞ்சின் ஒன்று பரிசோதனைக்கு தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அப்போது ஜங்க்சனில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அந்த எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிவிட்டது. அந்த இருப்பு பாதையானது, திருச்சியில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் , புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பாதை என்பதால் அந்த வழியாக செல்லும் […]
திருச்சி சிறப்பு முகாமில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 7 பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விடுதலை […]