கோவில்பட்டியில் மதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார், தொடர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் உள்ளது. தமிழகத்தில் மதசார்பின்மையை சிதைக்கும் வகையிலும், சீர்குலைக்கும் வகையிலும் சதி நோக்கத்தோடு, ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில், வடநாட்டில் தொடங்கி இங்கு வந்துள்ளனர். இதற்கு முழுபாதுகாப்பு தமிழக அரசு கொடுக்கிறது.அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல யோக்கியதை இல்லாத அரசு அண்ணா பெயரையோ, படத்தினையோ, கட்சியில் கருப்பு, சிவப்பு கலரை பயன்படுத்த தகுதியில்லாத அரசு பெரியார் சிலையை உடைப்போம் என்று அராஜக பேர்வழியயை கைது செய்யமால், ஜனநாயக முறையில் கருப்புக்கொடி காட்ட சென்றவர்களை கைது செய்வது என்ன நியாயம்,போராட்டக்களத்திற்கு வருவதற்கு முன்பே திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ததது என்ன நியாயம், மதுரையில் கிறிஸ்துவர்கள் ஜெபவீடு தாக்கப்படுகிறது, பெண் தாக்கப்படுகிறார். பைபிள் எரிக்கப்படுகிறது. குற்றவாளியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, காவல்துறைக்கு கடும் கண்டனத்தினை தெரிவிக்கிறேன், மேலும் கிறிஸ்துவ பள்ளிக்கு சென்று சுற்றுலா செல்லக்கூடாது, அப்படி சென்றால் இந்து கோவில்களுக்கு தான் செல்ல வேண்டும் என்று மிரட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதையெல்லாம் அனுமதித்து இருக்க மாட்டார், இரும்புக்கரம் கொண்டு தடுத்து இருப்பார், பெரியார் சிலையை செருப்பால் அடிப்போம் என்று சொன்னவன் நடவடிக்கை எடுக்கமால், நடமாட விட்டதால், இயந்திரம் வைத்து பெரியார் சிலையை எடுக்கின்றனர்.களவாணிகள், முதுகெலும்பு இல்லாதவர்கள், தைரியம் இருந்தால், மோடி மற்றும் தமிழக அரசு ஆதரவு இருப்பதாக கூறுகின்றவர்கள் காவல்துறையினர் துணையுடன் வந்து பெரியார் சிலைக்கு வரட்டும், இளைஞர்களுடன், ஆயுதங்களுடன் வந்து, துண்;டு, துண்டாக கைகால்போய்விடும், வினையை விதைச்சு இருக்கிறங்கீங்க வினையை அறுப்பிக்க என்றார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயாக ரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…