தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!
சரக்கு லாரியில் தூத்துக்குடி அருகே தீப்பிடித்ததில் 40 டன் கோதுமை மூட்டைகளுடன், லாரி எரிந்து சேதமடைந்தது. தூத்துக்குடியில் இருந்து 40 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி அருப்புக்கோட்டைக்கு புறப்பட்டது. அப்போது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் முன்பக்க சக்கரம் வெடித்ததால் தீப்பிடித்தது.
லாரியில் தீ பரவத் தொடங்கியதும், ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தி வைத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் லாரியும் அதில் இருந்த கோதுமை மூட்டைகளும் எரிந்து சாம்பலாகி விட்டன
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.