10ம் வகுப்பு பொதுத் தேர்வினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்

Default Image

10ம் வகுப்பு பொதுத் தேர்வினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 95 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (16.3.2018) முதல் (20.4.2018) வரை நடைபெறுகிறது. திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிற 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 296 பள்ளிகளில் இருந்து 23,718 மாணவ ஃ மாணவியர்கள் (11,546 மாணவர்கள், 12,172 மாணவியர்கள்) 95 தேர்வு மையங்களில் தேர்வு எழுகிறார்கள். தனித் தேர்வர்களில் 605 மாணவர்கள் மற்றும் 357 மாணவிகள், எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காரப்பேட்டை நாடார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தஸ்நேவிஸ் மாதா மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமாராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி ஆகிய 7 தேர்வு மையங்களில் தேர்வு எழுகிறார்கள்.இதில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 61 தேர்வு மையங்களில் 7,135 மாணவர்களும்;, 7,769 மாணவியர்களும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களில் 4,411 மாணவர்களும்;, 4,403 மாணவியர்களும் பங்கேற்கிறார்கள்.மேலும், இத்தேர்விற்கு 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தேர்வுக்குரிய வினாத்தாள் கட்டுக்களை 20 வழித்தட அலுவலர்கள் மூலமாக தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. இத்தேர்வினை கண்காணிக்க முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக ஆசிரியர் ஆகியோர் தலைமையில் 190 ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினர்களாகவும், 95 துறை அலுவலர்களாகவும், 10 கூடுதல் துறை அலுவலர்களாகவும், 95 ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளராகவும், 5 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளராகவும், 1,333 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளராகள் என மொத்தம் 1,773 ஆசிரியர்கள் இத்தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று நடைபெறும் தேர்வில் 63 மாற்றுத்திறனாளிகள் (இதில் 4 பேர் பார்வை குறைபாடு உள்ளவர்கள்) 35 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள் என்றார்.நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் டி.மனோகரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரய்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 355 மாணவ, மாணவியர்களும், தனித்தேர்வில் 52 மாணவ, மாணவியர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்