“அது வதந்தி நம்பாதீங்க”..தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு முக்கிய தகவல் கொடுத்த தமிழ்நாடு வெதர் மேன்!
தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களில் நிரம்பும் அணைகள் என தகவல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி : தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், நெல்லை பாபநாசம், மணிமுத்தாறு அணை ஆகிய அணைகள் கனமழை காரணமாக நிரம்பியது எனவும். இதனால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த தகவலை பார்த்த மக்கள் சற்று அதிர்ச்சியுடன் உண்மையா அல்லது இது வதந்தியா? என குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இது வதந்தி செய்தி மக்கள் யாரும் கவலைப்படவேண்டாம் என தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப்ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ” நெல்லை – தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை வருவதற்கு முன்பு அணைகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்தன. எனவே, நெல்லை பாபநாசம் (41% நிரம்பியது), மணிமுத்தாறு அணை (56% நிரம்பியது) .அணை நிரம்புவதற்கு அதிக மழை தேவை.
எனவே, பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக வதந்தி பரவி வருவதால் தூத்துக்குடி மக்கள் கவலைப்பட தேவையில்லை. அவை உண்மையல்ல, இந்நிலையில் தென்காசி அணைகளில் இருந்தும் தண்ணீர் குறைந்துள்ளது. நாளை தம்பிரபரணியில் இருந்து தண்ணீர் இயற்கையாக இறங்கும்” எனவும் தகவலை தெரிவித்துள்ளார்.
Nellai – Thoothukudi rains to continue till night and then from tomorrow morning they get the much deserved break in rains. This NE monsoon their rainfall was so poor the dams were at such low level.
People in Thoothukudi need not worry about rumors about water being released… pic.twitter.com/ER36ihRb9O
— Tamil Nadu Weatherman (@praddy06) December 14, 2024