துாத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்களை கண்டறிந்து காவல்துறை விழிப்புணர்வு!
துாத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
துாத்துக்குடி நகரில் வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதிகரித்து விட்டனர்.இதனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது.இது குறித்து மாவட்ட எஸ்பி.மகேந்திரன் அறிவுரையின்படி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் நகரில் வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தினார்.இதில் 30 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேகமாக செல்வது பற்றி கூறும் பாேது,
வேகமாக செல்லும் இளைஞர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்து அவர்கள் வாகன எண்களை குறித்து அதன்மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியதுடன் அவர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்து சட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.இது போன்ற வகுப்புகள் துாத்துக்குடி காவல் உட்கோட்டத்தில் காவல்நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
இது போல் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.அப்போது போக்குவரத்து ஆய்வாளர்கள் சந்தனகுமார்,உதவி ஆய்வாளர்கள் மயிலேறும் பெருமாள்,நம்பிராஜன்,வேலாயுதம் மற்றும் போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைதிருங்கள்.