தூத்துக்குடி அருகே கோவில்பட்டியில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் கொலை!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புது தாப்பாத்தி பகுதியை சேர்ந்த முகேஷ்குமார் என்பவர், நேற்று மாலை அதே பகுதியில் உடலில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சென்ற மாசார்பட்டி போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முகேஷ்குமார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பவதால், முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
#Thoothukudi
source: dinasuvadu.com